நடிப்பை விட போட்டோசூட் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஒரு சிலர் இருக்கிறார்கள் இதற்கு விதை போட்டது முதலில் ரம்யா பாண்டியன் தான் மொட்டைமாடி போட்டோ ஷூட் மூலம் பெண் மனதை கொள்ளை கொண்டவர் ரம்யா பாண்டியன் அதன் பின்னர் பல பொருட்களை நடத்தினாலும் இளசுகளின் சென்சேஷனல் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவானி ஆனால் இவருக்கு சீரியலில் கிடைத்த ரசிகர்களை விட போட்டோ ஷூட் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம்.
சமீபகாலமாகவே நடிகை சிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அதிலும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாகத்தான் இருந்து வருகிறது பொதுவாக மாலை நேரத்தில் புகைப்படத்தை பதிவிடும் பிக் பாஸ் நெருங்க இருப்பதால் சதா இன்ஸ்டாகிராமில் தான் குடியிருந்து வருகிறார்.
அதேபோல சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம். அந்த வகையில் இவர் நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் சில கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் ‘பிளாஸ்டிக் சர்ஜரி மூஞ்சி’ என்று கேலி செய்து இருந்தார். அதற்கு பதிலளித்த சிவானி நீங்கள் எனக்கு சர்ஜரி செய்தீர்களா? ஒருவரைப் பற்றி தெரியாமல் வார்த்தைகளை விடாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க நடிகை சிவானி இந்த ஆண்டு ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது மேலும் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் போட்டியாளர்கள் அனைவரையும் ஒரே ஹோட்டலில் தங்க வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.