தனது காதலை மறைமுகமாக சொல்லி புரிய வைக்க முயற்சிக்கும் ஷிவின் – புரியாதது போல் நடிக்கும் ஆண் போட்டியாளர். வைரலாகும் வீடியோ இதோ.

0
850
shivin
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் சிவின் காதலிக்கும் நபர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஆறாவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஜிபி முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல், ஷெரினா,மகேஷ்வரி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள்.

- Advertisement -

சிவின் கணேசன் குறித்த தகவல்:

இது ஒரு பக்கம் இருக்க, இந்த முறை நிகழ்ச்சியில் சிவின் கணேசன் என்ற திருநங்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். இவர் வீட்டுக்கு ஒரே பையன். இவர் திருநங்கையாக மாறியவுடன் இவருடைய விருப்பத்திற்கு வீட்டில் ஆதரவு கொடுக்கவில்லை. இதனால் இவர் வேலை தேடி சிங்கப்பூர் சென்றார். சில ஆண்டுகள் இவர் அங்கேயே இருந்தார். அதற்குப் பின்னர் இவர் மீண்டும் இந்தியா வந்தார். ஆனால், இவர் திரும்பி வந்ததை அவர்களுடைய வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை.

பிக் பாஸ் வீட்டில் சிவின் கணேசன்:

அதோடு இவர் தன்னுடைய அம்மாவை கூட சந்திக்கவில்லையாம். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் இதுவரை தன்னிடம் பேசாத அம்மா பேசுவார் என்று எதிர்பார்த்து இந்த நிகழ்ச்சியில் சிவின் கணேசன் கலந்து கொண்டு இருக்கிறார். இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து சிவின் கணேசன் மிகச் சிறப்பாக விளையாடி கொண்டு வருகிறார். இவர் பல அவமானங்கள், கிண்டல்களை சந்தித்தாலும் அதை எல்லாம் எதிர்கொண்டு தைரியமாக விளையாடி வருகிறார்.

-விளம்பரம்-

சிவின் கணேசன் காதல்:

மேலும், இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆக விக்ரமன் அல்லது சிவின் தான் இருப்பார் என்றும் ரசிகர்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது. சமீபத்தில் ரக்ஷிதா உடன் பேசிக் கொண்டிருக்கும்போது சிவின் தன்னுடைய முதல் காதலை கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் அவருடைய அம்மாவுக்காக தான் தன்னுடைய காதலை விட்டுக் கொடுத்ததாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் சிவின் பிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு நபரை காதலிக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் உலா வருகிறது.

சிவின்-கதிரவன் காதல்:

அவர் வேறு யாரும் இல்லைங்க, விஜே கதிரவன் தான். விஜே கதிரவன் மீது தான் சிவனுக்கு கிரஸ் ஏற்பட்டு இருக்கிறது. இதை சூசகமாகவே சிவின் கதிரவனிடம் சொல்லி இருக்கிறார். ஆனால், அது கதிரவனுக்கு புரியவில்லை. அது மட்டும் இல்லாமல் கதிரவனை ஏற்கனவே செரினா காதலித்ததாக கூறப்பட்டது. அவரை அடுத்து மகேஸ்வரியும் தன்னுடைய கிரஷ் கதிரவன் தான் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது சிவின் கிரஸ்சாக கதிரவன் இணைந்து இருக்கிறார். இந்த சீசனில் இவர்கள் காதல் ஜோடிகளாக மாறுவார்களா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement