வறுமையில் வாடிய பில்லா 2 நடிகர் – நேரில் சென்று சந்தித்து உதவி செய்த முதல் பிக் பாஸ் பிரபலம்.

0
27533
theepetti
- Advertisement -

சினிமாவை பொறுத்து வரை அனைவருக்கும் வாழ்க்கை சரியாக அமைந்துவிடுவது இல்லை. குறிப்பாக எத்தனையோ துணை நடிகர்களின் நிலை பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கதைகளை நாம் பலவற்றை கேட்டுள்ளோம். அந்த வகையில் சமீபத்தில் தீப்பெட்டி கணேசனின் நிலையை கண்டு திரையுலக பிரபலங்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தமிழ் சினிமா உலகிற்கு ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தீப்பெட்டி கணேசன். இவரது இயற்பெயர் கார்த்திக். தீப்பெட்டி கணேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் இவரை அனைவரும் தீப்பெட்டி கணேசன் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு அஜித்தின் பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா செய்யும் பணியில் சேர்ந்தார். பின் இவர் உடலில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இவர் வேலைக்கு செல்ல முடியாமல் அன்றாட பிழைப்பிற்கு தவித்து வருகிறார்.

- Advertisement -

தீப்பெட்டி கணேசனுக்கு திருமணமாகி 2 மகன்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து வறுமையில் வாடி வரும் தீப்பெட்டி கணேசனுக்கு தற்போது கொரோனா லாக்டவுனில் எந்த வித வருமானமும் இல்லாததால் ஒரு வேளை உணவிற்கு மொத்த குடும்பமும் தவித்து வருகிறது. சமீபத்தில் கூட நடிகர் விஷால் அவர்கள் ஒரு மாதத்திற்கான மளிகை சாமான் அனுப்பிவைத்து இருந்தார். அதற்க்கு நன்றி கூறி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீப்பெட்டி கணேசனை நேரில் சந்தித்து உதவிய சினேகன்

தீப்பெட்டி கணேசன் தல அஜித்திடம் உதவி கேட்டு நெஞ்சை உருக்கும் அளவிற்கு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார் அதில் அவர் கூறியிருப்பது, அஜித்தை சந்திக்க பல முறை முயற்சி செய்தேன். ஆனால், அவரை சுற்றி இருப்பவர்கள் என்ன விடவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரும் தீப்பெட்டி கணேசன் என்று தான் கூப்பிடுவார்கள். நான் எவ்வளவோ படங்கள் நடித்து விட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் கார்த்திக் என என் பெயரை கூப்பிட்ட ஒரே கடவுள் அஜித் சார் மட்டும் தான்.

இதையும் பாருங்க : தாமிரபரணி பட நடிகை பானுவிற்கு இவ்வளவு பெரிய மகளா. லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

-விளம்பரம்-

என்னுடைய நிலையை கண்டால் அஜித் சார் நிச்சயம் உதவுவார். இந்த வீடீயோவை அஜித் சாருக்கு சென்றடைய உதவுங்கள் என்று கூறி இருந்தார். இதையடுத்து லாரன்ஸ், தீப்பெட்டி கணேசனின் குழந்தைகளின் படிப்பிப்புக்கு உதவுதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் பிரபல பாடலாசிரியருமான சினேகன் தீப்பெட்டி கணேசனை நேரில் சென்று சந்தித்துள்ளார். மேலும் அவரின் சினேகம் செயலகம் அறக்கட்டளை சார்பில், தீப்பெட்டி கணேசனின் குடும்பத்திற்கு 2 வாரத்துக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கி உள்ளார்.

மேலும், அவரின் இரண்டு குழந்தைகளின் இந்த வருட கல்விச் செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதுபோல் கஷ்டப்படும் கலைஞர்களுக்கு உதவ பலர் முன் வர வேண்டும் என மேலும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் லாரன்ஸ். தீப்பெட்டி கணேசன் வீடியோ வெளியிட்ட பின்னர் அவரை நேரில் சென்று சந்தித்த முதல் சினிமா பிரபலம் சினேகன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement