எத்தனை விமர்சனங்கள், எத்தனை ஏளனங்கள் – சினேகன் பதிவிட்ட உருக்கமான பதிவு.

0
13639
- Advertisement -

பிரபல பாடல் ஆசிரியரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சினேகனுக்கு கடந்த 29ஆம் தேதி திருமணம் நடைபெற்று இருந்தது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் நான்கு சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

-விளம்பரம்-

கடந்த சில தினங்களுக்கு முன் சினேகனுக்கு கன்னிகா என்ற நடிகையுடன் திருமணம் நடைபெற்றது. நடிகை கன்னிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு கன்னிகா தொடரில் நடித்துள்ளார்.இவர் தேவராட்டம் படத்தில் நடித்துள்ளார். அதே போல பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதையும் பாருங்க : எனக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லை புருடா விட்டுள்ள பாலாஜி – 2019ல் நடந்த விபத்தில் பாலாஜி குறித்து புட்டு புட்டு வைத்துள்ள யாஷிகா.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தனது திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து தனது காதல் மனைவி குறித்து பதிவிட்டு வரும் சினேகன், தன்னை கேலி செய்தவர்கள் குறித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், எத்தனை விமர்சனங்கள்… எத்தனை கிசுக்கிசுக்கள்… எத்தனை ஏளனங்கள்… எத்தனை அவமதிப்புகள்… அத்தனைகளையும் ரணங்களோடு தாங்கிக் கொண்டது. இப்படி ஒரு தருணத்திற்காகத்தான் என்று மிகவும் உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

This image has an empty alt attribute; its file name is 1-5-522x1024.jpg

அதே போல மற்றொரு பதிவில், திருமணம் முடிந்த மறுநாளே சிவகாசியில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் “ஆனந்தம் விளையாடும் வீடு” என்ற படத்தில் நடித்ததும். அதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணம் திருப்பம் தரும்
என்பது உண்மைதானோ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement