லவ்வோ லவ்வு – முதல் திருமணநாளை சினேகன் எப்படி கொண்டாடியுள்ளார் பாருங்க. வீடியோ இதோ.

0
471
snehan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடல் ஆசிரியராக திகழ்பவர் சினேகன். இவர் எழுதிய பல பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறது. அதோடு இவர் 2500 பாடலுக்கு மேல் எழுதி இருக்கிறார். ஆனால், இது பலருக்கும் தெரியாத ஒன்று. அதிலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் பாடல்களில் பல இவர் எழுதியது தான். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

-விளம்பரம்-
Bigg Boss Snehan Posted First Picture With Her Wife Kannika

மேலும், பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக சினேகன் கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார் என்றே சொல்லலாம் . இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன் கமலின் கட்சியில் இணைந்தார். இதனிடையே சினேகன் அவர்கள் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

சினேகன் – கன்னிகா திருமணம்:

கடந்த 10 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்து இருந்தார்கள். பின் இவர்களின் திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு படு விமர்சியாக நடைபெற்று இருந்தது. மேலும், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் தலைமையில் தான் இவர்களின் திருமணம் நடந்து இருந்தது. அதுமட்டும் இல்லாமல் கன்னிகா வேற யாரும் இல்லைங்க, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த கல்யாண வீடு என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து இருந்தவர்.

கன்னிகா திரைப்பயணம்:

மேலும், இவர் தேவராட்டம், அடுத்த சாட்டை போன்ற படத்தில் நடித்து இருக்கிறார்.பின் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சினேகன்-கன்னிகா திருமணம் குறித்து பல பேர் விமர்சித்து இருந்தார்கள். காரணம் இவர்கள் இருவருக்கும் பத்து வருடம் வித்தியாசம் என்பது தான். இருந்தாலும் இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து ஆழமாகக் காதலித்தும், தங்களுடைய வாழ்க்கையை இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தும் வருகின்றனர்.

-விளம்பரம்-

சினேகன் நடித்த படம்:

பின் சினேகன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். நிகழ்ச்சிக்கு பின் சினேகன் நடித்து இருந்த ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படம் வெளியாகி இருந்தது. தற்போது சினேகன் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, கன்னிகா யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். இதில் அவர் தன் கணவருடன் இருக்கும் புகைப்படம், வீடியோ என்று அனைத்தையும் பகிர்ந்து வருவார்.

சினேகன் முத்தம் கொடுத்த வீடியோ:

அந்த வகையில் தற்போது இவர்கள் தங்கள் முதல் திருமண நாளை கொண்டாடி இருக்கின்றனர்.  திருமண நாளை ஹோட்டலில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோவை 2 தினங்களுக்கு முன்பு கன்னிகா தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.

Advertisement