அட, சினேகன் மனைவி இந்த படத்துல நடிச்சிருக்காங்களாம் – ஆனா, அந்த காட்சிய கட் பண்ணிட்டாங்களாம்.

0
3141
snehan

பிரபல பாடல் ஆசிரியரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சினேகனுக்கு கடந்த 29ஆம் தேதி திருமணம் நடைபெற்று இருந்தது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் நான்கு சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் சினேகனுக்கு கன்னிகா என்ற நடிகையுடன் திருமணம் நடைபெற்றது. நடிகை கன்னிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு கன்னிகா தொடரில் நடித்துள்ளார்.இவர் தேவராட்டம் படத்தில் நடித்துள்ளார். அதே போல பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதையும் பாருங்க : ஒரு அப்பாவியா கொன்னுட்டு நீ ஏன் பொழச்ச, சாவுடி – திட்டி தீர்த்த நபருக்கு யாஷிகா கொடுத்த பதில்.

- Advertisement -

இந்த நிலையில் இவர்கள் திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த திருமணத்தை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் தலைமையில் நடத்தி வைக்கப்பட்டது. சினேகன், திருமணம் செய்துள்ள கன்னிகா சமுத்திரகனியின் அடுத்த சாட்டை படத்தில் கூட நடித்துள்ளார்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், அந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்த தான், ஆசிரியர் சமுத்திரகனிக்கு காதல் மெசேஜ்களை அனுப்பி இருப்பேன். அதன் பின்னர் ஒரு லைப்ரரியில் உட்கார்ந்து சமுத்திரக்கனி இதுகுறித்து கேள்வி கேட்பார்.அப்போது தான் உணர்ச்சிவசமான வசனங்கள் பேசி இருந்தேன். ஆனால், அந்த காட்சியை நீக்கிவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement