விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி நான்கு வாரம் முடிந்து 32 நாள்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். பின் நான்காவது வாரம் எலிமினேஷன் நடக்கவில்லை.
பிக் பாஸ் 8:
அதன் பின் நிகழ்ச்சியை மேலும் சுவராசியமாக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக மாடல் அழகி வர்ஷினி வெங்கட், சீரியல் நடிகர் ராயன், நடிகரும் மாடலும் ஆன ராணவ், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, ரியா தியாகராஜன், சுஜா வருணியின் கணவர் சிவக்குமார் ஆகியோர் நிகழ்ச்சிக்குள் நுழைந்து இருக்கிறார்கள். தற்போது போட்டியாளர்களுக்குள் சண்டை, போட்டி, பொறாமை, கலாட்டா கலவரம் என்று நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பரீட்சியமான நபர்களில் ஒருவராக சௌந்தர்யா இருக்கிறார்.
சௌந்தர்யா குறித்த தகவல்:
மாடலிங் மூலம் இவர் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதற்குப் பிறகு சோசியல் மீடியா மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளில் சௌந்தர்யாவின் குரலை போட்டியாளர்கள் கலாய்த்தது இருந்தது கடுப்பேற்றி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெறுகிறது. அதுமட்டுமில்லாமல் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து சௌந்தர்யா தனிமையாகவும், சோலோ கேம் விளையாடி வருகிறார். இதனாலே இவரை பெண்கள் அணியினர் ஒதுக்கி வைத்தும் கிண்டல் செய்துமே இருக்கிறார்கள்.
மாஸ் காட்டும் சௌந்தர்யா:
அதோடு தன்னுடைய குரலினால் வாய்ப்புகளும் அவமானங்களும் வந்தது என்று நினைத்த சௌந்தர்யாவுக்கு அதே குரலினால் வரவேற்பும் கிடைத்து இருக்கிறது. எல்லோருமே அவரை செல்லமாக சவுண்டு என்று அழைத்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு நாளும் சௌந்தர்யா செய்யும் விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டும் வருகிறது. சொல்லப்போனால் பிக் ஓவியாக்கு பிறகு சௌந்தர்யாவுக்கு தான் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் நிகழ்ச்சியில் நுழைந்த முதல், இரண்டு வாரங்கள் அமைதியாக இருந்தாலும் தற்போது தீவிரமாக டாஸ்க்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
Nengalam ipo thane #Soundariya'va paakuringa.#Sound was a BEAST long back 🔥🔥#BiggBoss8Tamil #BiggBossSeason8Tamil #BiggBossTamil #BiggBossTamil8 #BBTamil8pic.twitter.com/Xxotg3i2EU
— Rasigan 🧊🔥 (@Rasigan_022) November 5, 2024
சௌந்தர்யா வீடியோ:
அதுமட்டுமில்லாமல் ஆண்கள் அணிக்கு எதிராக இவர் செய்யும் வேலைகள் எல்லாம் பயங்கரமாக இருக்கிறது. இதனாலே ஆண்கள், சௌந்தர்யாவை விமர்சித்து பேசி இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் சௌந்தர்யாவின் ஒரு வீடியோ தான் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இவர் ஏற்கனவே விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒளிபரப்பாகி இருந்த வில்லா டு வில்லேஜ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அதில் இவர் பயங்கரமாக டாஸ்கெல்லாம் விளையாடியிருந்தார். தற்போது இதை தான் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ என்ற பாடலைப் போட்டு தீயாய் வைரலாக்கி வருகிறார்கள்.