குக்கு வித் கோமாளி 3க்கு வாங்க – ரசிகரின் வேண்டுகோளுக்கு சுச்சி சொன்ன பதில்.

0
1376
suchi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-
suchi

சொல்லப்போனால் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை. செம ஜாலியாக சென்று கொண்டு இருந்த இந்த சீசன் விரைவில் நிறைவடைய இருக்கிறது. அதே போல இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போது துவங்கும் என்று ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இதையும் பாருங்க : தயவு செஞ்சி ஷிவாங்கியோட என்ன கம்பேர் பண்ணாதீங்க – பாக்கியலக்ஷ்மி சீரியலின் இளம் நடிகை.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் சுச்சித்ரா கலந்துகொள்ள ஆசைப்பட்டுளளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் ‘தயவு செய்து குக்கு வித் கோமாளி 3 க்கு போங்க. உங்கள விடுவதா இல்லை’ என்று பதிவிட்டார். அதற்கு பதில் அளித்த சுச்சி, அதுதான் என் மீது உங்களுக்கு இருக்கும் என்றால், தயவு செஞ்சி என்னை விட்டுட்டாங்க என்று பதில் அளித்துள்ளார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே சுச்சி லீக்ஸ் மூலம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். ஆனால், தன்னுடைய ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது. வேறு யாரோ தான் பிரபலங்களின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுவிட்டனர் என்று கூறி இருந்தார். சுச்சி லீக்ஸ்சுக்கு பின்னர் சில வருடங்கள் சினிமாவை விட்டு விலகிய சுச்சி, பிக் பாஸ் 4 மூலம் தான் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் கமல் பற்றியும் சில போட்டியாளர்கள் பற்றியும் சர்ச்சையாக பேசி இருந்தார் சுச்சி. ஒருவேளை இவர் குக்கு வித் கோமாளிக்கு வந்தால் என்ன நடக்குமோ ?

Advertisement