ஓணம் பண்டிகையில் மகனுக்கு பெயர் சூட்டிய சுஜா தம்பதியினர்.! இப்போ அவர் மகன் எப்படி இருக்கார் பாருங்க.!

0
4968
suja

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்த இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இடையில் பட வாய்ப்புகள் இல்லாததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார் சுஜா.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராங்கியாக சுற்றி வந்த சுஜா சிவாஜியின் பேரின் சிவகுமாரை நீண்ட வருடங்களாக காதலித்து வந்தார். கடந்த ஆண்டு இவருக்கும் இரு விட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. சிவாஜியின் பேரனான சிவகுமார் தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய “சிங்கக்குட்டி” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

- Advertisement -

இதையும் பாருங்க : லாஸ்லியாவிடம் அவரது தந்தை குறித்து அன்றே சொன்ன சாண்டி.! வைரலாகும் பிளாஷ் பேக் குறும்படம்.!

Read more at: 

-விளம்பரம்-

அந்த படத்திற்கு பின்னர் “புதுமுகங்கள் தேவை”, “இதுவும் கடந்து போகும்” போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். திருமணமான சில மாதங்களிலேயே சுஜா வாருணி கருவுற்று இருந்தார். மேலும், இவரது சீமந்த புகைப்படங்களை கூட அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த புதன் கிழமை ஆகஸ்ட் 21 ஆம் தேதி சுஜா வருணிக்கு ஆண் குழந்தைபிறந்தது.

இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள அவரது கணவர் என்னுடைய சிம்ஹா பிறந்துவிட்டான் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் சுஜா மற்றும் சிவகுமார் தனது குழந்தையுடன் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை முதன் முறையாக வெளியிட்டுள்ளனர். மேலும்,அவரது மகனுக்கு அத்வைத் என்று பெயர் சுட்டுயுள்ளனராம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement