விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று இருந்தது. ஆனால், ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். இதில் முதல் பரிசினை ஆரவ்வும் இரண்டாம் பரிசினை கவிஞர் சினேகனும் தட்டி சென்றார்கள். இந்த சீசனில் பெண் போட்டியாளர்களில் மிகவும் பிரபலமான அவர்களில் ஒருவராக இருந்து வந்தார் நடிகை சுஜா வருணி.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே இவர் பல்வேறு படங்களில் கதாநாயகியாகவும் ஒரு சில படங்களில் ஐட்டம் டான்ஸர் ஆகவும் நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் ஏற்படுத்தி தந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் செய்த அமலி துமலிகளை ரசிகர்கள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள். சொல்லப்போனால் மூன்றாவது சீசனில் கலந்துகொண்ட வனிதாவை போல இவரும் பிக் பாஸ் முதல் சீசனில் ஒரு சவுண்ட் பார்ட்டியாக இருந்து வந்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு இவருக்கும் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாருக்கு திருமணம் நடைபெற்றது. தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய “சிங்கக்குட்டி” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவகுமார் . அந்த படத்திற்கு பின்னர் “புதுமுகங்கள் தேவை”, “இதுவும் கடந்து போகும்” போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்ட சுஜா வருனி. மேலும் இவருக்கு ஒரு ஆண் குழந்தை கூட இருக்கிறது. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சுஜா வருணி சமீபத்தில் சலிம்மாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலர் ஷாக்கானார்கள். ஆனால், இது பழைய புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.