இதுக்கு முன்னாடி இப்படி அசிங்கப்பட்டது இல்லை – சுரேஷ் சக்கரவர்த்தி வருத்தம்.

0
1006
suresh
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆரி, பாலாஜி, ரியோ, சோம், கேப்ரில்லா, ரம்யா ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் தற்போது ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் நேற்று நிஷா, அர்ச்சனா, ஜித்தன் ரமேஷ், ரேகா ஆகியோர் உள்ளே சென்று இருந்தனர். அதே போல இன்றைய நிகழ்ச்சியில் சனம், சம்யுக்தா, வேல்முருகன், சுச்சத்ிரா, ஆஜீத் ஆகியோர் உள்ளே சென்று உள்ளனர். இன்னும் அனிதா மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி மட்டும் தான் என்ட்ரி கொடுக்காமல் இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

சனம் ஷெட்டி உள்ளே நுழைந்ததை ப்ரோமோவில் ஸ்பெஷலாக காண்பிக்கவில்லை, இருப்பினும் சனம் ஷெட்டியின் ஹேஷ் டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட சுரேஷ் சக்ரவர்த்தி எப்போது வருவார் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வரும் நிலையில் நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். அதில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றவர்களுக்கும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள போட்டியாளர்கள்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். டிவி முன்னாள் அமர்ந்துகொண்டு உங்கள் அனைவரையும் உற்காசகாப்படுத்துவேன் என்று பதிவிட்டு இருந்தார்.

இதையும் பாருங்க : சம்யுக்தாவை விட சனம் குறைச்சலா – கடுப்பான ரசிகர்கள். ட்ரெண்டிங்கில் வந்த சனம் ஷெட்டி.

- Advertisement -

சுரேஷ் சக்ரவர்த்தியின இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அப்போது நீங்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல மாடீர்களா என்று கமன்ட் செய்து வந்தனர். அதற்கு பதில் அளித்துள்ள சுரேஷ் சக்ரவத்தி எனக்கு அழைப்பு வரவில்லை என்றும் அழைக்காத இடத்திற்கு நான் எப்படி வரமுடியும். ஒருவேளை நான் தகுதியற்ற போட்டியாளரோ என்னவோ என்றும் இதற்கு முன்னாள் இப்படி அவமதிக்கப்பட்டது இல்லை என்றும் வருத்தத்தோடு பதிவிட்டுள்ளார்.

சுரேஷ் சக்ரவத்தியின் இந்த பதிலில் அவரது ரசிகர்கள் பலரும் விஜய் டிவியை திட்டித்தீர்த்தனர். அதற்கு பதில் அளித்த சுரேஷ் சக்ரவத்தி, இதற்கு சேனல் காரணம் இல்லை. ஆனால், ஒரு லேடியின் வேலை தான் என்று கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கும் போது சுரேஷ் சக்கரவர்த்தியின் ரீ என்ட்ரியை பொறுக்காத யாரோ ஒருவரின் அழுத்தம் காரணமாக தான் அவர் வரவில்லை என்று தோன்றுகிறது.

-விளம்பரம்-
Advertisement