வா மகளே வா. சனம் வெளியேறிய பின்னர் சுரேஷ் போட்ட பதிவை பாருங்க.

0
1226
sanam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 61 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகியோர் வெளியேறி இருந்த நிலையில் நேற்று (டிசம்பர் 6) சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டு இருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஆரி, ஆஜீத், அனிதா, ரம்யா பாண்டியன், ஷிவானி, நிஷா, சனம் ஷெட்டி ஆகியோர் இடம்பெற்றனர். இந்த வாரம் ஆஜீத், ஷிவானி, நிஷா, அனிதா ஆகிய யாரவது 4 பேரில் ஒருவர் தான் நிச்சயம் வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் பலரும் எதிர் பார்த்தனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-33.jpg

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டு இருந்தார்.மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை சனம் ஷெட்டியின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே சனம் ஷெட்டியை விட நிஷா, ஷிவானி, ஆஜித் போன்றவர்கள் எந்த விதத்தில் சிறந்த போட்டியாளர்களாக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சனம் ஷெட்டி வெளியேறியதையடுத்து ட்விட்டரில் சனம் ஷெட்டி ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் கூட வந்தது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் சனம் ஷெட்டி வெளியேற்றத்திற்கு பின்னர் சுரேஷ் சக்ரவர்த்தி ட்வீட்களை அள்ளி வீசி வருகிறார். சுரேஷ் சக்ரவர்த்தி பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை பலருடன் சண்டை வந்துள்ளது. ஆனால், இவருக்கும் சனம் ஷெட்டிக்கும் வந்த சண்டை தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. சுரேஷ் சக்ரவர்த்தி பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அரக்கர் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் சனம் ஷெட்டி அரக்கர் கூட்டத்தை சக்கரவர்த்தி அரசர் கூட்டத்திலும் இருந்தார் இந்த டாக்கில் போது சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவருமே ஆரம்பத்தில் வாய்ச் சண்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சுரேஷ் சக்ரவர்த்தி கையில் வைத்திருந்த தன்டாயுதத்தால் நிஷாவை விளையாட்டாக அடிக்க சென்றபோது அது தெரியாமல் சனம் ஷெட்டி மீது பட்டு விட்டது. இதனால் ஆத்திரமடைந்த சனம் ஷெட்டி, சுரேஷ் சக்ரவர்த்தி வாடா போடா என்று கண்டமேனிக்கு விளாசித் தள்ளினார். இப்படி ஒரு நிலையில் சனம் ஷெட்டி வெளியேறிய பின்னர் சுரேஷ் சக்ரவர்த்தி சனம் ஷெட்டி குறித்து ட்வீட் போட்டு இருக்கிறார். நீ ராணி போல வெளியேறி இருக்கிறாய். வா மகளே வா வெற்றி வாகை சூடிக்கொண்டு வா என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement