ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இன்று (ஜூன் 23) துவக்க இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல் போட்டியாளர்களை அறிமுகம்செய்ய இருக்கிறார்
தர்ஷன் :
இதற்கான பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இன்னும் சற்று நேரத்தில சீசன் 3 க்காண கொண்டாடட்டம் கோலாகலமாக துவங்க இருக்கிறது. இந்த சீசனில் பங்குபெற போகும் போட்டியாளர்களை பற்றிய விவரங்கள் ஏற்கனவே நமது இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தோம்.
இதையும் பாருங்க : புதிய கெட்டப்பிற்கு மாறிய விக்ரம்.! எப்படி தான் இவரால மட்டும் முடியுதோ.!
அதில் ஒரு சில போட்டியாளர்கள் பரிட்சயமாக இருந்தாலும் ஒரு சில போட்டியாளர்கள் நமக்கு யாரென்று தெரியாத புதிய முகங்களாக இருக்கிறது. அந்த வகையில் இந்த சீசனில் 2 வெளிநாட்டை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ஒருவர் தர்ஷன் தியாகராஜா மற்றொருவர் முகன் ராவ்.
முகன் ராவ் :
இதில் தர்ஷன் தியாகராஜன், இலங்கையை சேர்ந்த மாடலாவார். பல்வேறு விளம்பர படங்களில் நடித்துள்ள தர்ஷன் தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘வேறென்ன வேண்டும்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். மற்றொரு போட்டியாளரான முகன், இந்த சீஸனின் மிகவும் இளம் போட்டியாளராவார்.
தர்ஷன் தியாகராஜனை பற்றி மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்க
மலேசியாவை சேர்ந்த இவர், ஒரு ஹிப் ஹாப் பாடகராவார். இதுவரை மலேசியாவில் பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். மேலும், இவருக்கென்று மலேசியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும், இவர் தமிழிலும் ஒரு ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முகன் ராவ் பற்றி மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்க