இது உங்க வீட்டில்ல, இங்க அடங்கி தான் ஆகணும் – கடுப்பான சுரேஷ்- டிவியில் வராத வீடியோ இதோ.

0
2429
suresh
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி ஞாயிற்று கிழமை கோலாகலமாக துவங்கியது இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். ரியோ, ரேகா, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ்,ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், வேல்முருகன் என்று பல பரிட்சயமான போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் ஒரு சில புது முகங்கள் கூட கலந்து கொண்டு உள்ளனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் நடிகர் சுரேஷ் சக்ரவர்தியும் ஒருவர். இவர் நேற்று 14 வது போட்டியாளராக என்ட்ரி கொடுத்து இருந்தார். இவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்த போது இவர் கண்டிப்பாக ஒரு ஸ்ட்ரிக்ட்டான பேர்வழியாக தான் இருப்பார் என்று பலரும் நினைத்தனர். அதே போல நேற்று போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சியின் போது இவரை அறிமுகம் செய்து வைக்கையில் கமலிடம் கூட கொஞ்சம் ஓவராக தான் பேசி இருந்தார்.

- Advertisement -

மேலும், இவரை பற்றி வீடியோ வந்த போது ‘தனக்கு Obsessive compulsive disorder (OCD) இருக்கிறது என்றும் அனைத்து விஷயங்களுக்கு சரியாக இருக்க வேண்டும் என நினைப்பேன் என எதிர்பார்ப்பேன் என தெரிவித்துஇருந்தார். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸின் Unseen வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பாலாஜி முருகதாஸுடன் பேசியுள்ள சுரேஷ் சக்கரவர்த்தி, நான் பாதி பேய் பாதி பிசாசு என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே சுரேஷ் மீது ரசிகர்கள் கொஞ்சம் அப்சட்டில் இருந்து வருகின்றனர். காரணம், நேற்றைய நிகழ்ச்சியில் இவர் ஷிவானியிடம் ‘ஏன் மூஞ்சா அப்படி வச்சிருக்க’ என்று கேட்டிருந்தார். அதே போல இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் அனிதா சம்பத்திற்கும் இவருக்கும் கொஞ்சம் வாக்கு வாதம் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement