இரண்டாவது சீசனில் தாடி பாலாஜி, 3வது சீசனில் சாண்டி – 4வது சீசனில் இந்த விஜய் டிவி பிரபலம் தானா ?

0
1788
biggboss
- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சமயத்தில் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இருந்திருக்கும். ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படாமல் இருக்கிறது.

-விளம்பரம்-

தெலுங்கில் ஏற்கனவே ப்ரோமோ வெளியான நிலையில் சமீபத்தில் தான் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்றும் வெளியானது. மேலும், தெலுங்கு பிக் பாஸ் வரும் செப்டம்பர் 6 ஆம் துவங்கும் என்றும் சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால், தமிழில் இன்னும் எப்போது துவங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகவில்லை. அக்டோபர் முதல் வாரத்தில் தமிழ் பிக் பாஸ் 4 துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதுபோக கடந்த சில தினங்களாக இவர்கள் கலந்து கொள்வார்களா அவர்கள் கலந்து கொள்வார்களா என்று பிக்பாஸில் கலந்துகொள்ளப் போவதாக இருக்கும் சில பிரபலங்களின் பெயர்களும் இணையத்தில் கசியத் தொடங்கிவிட்டது.இந்த சீசனில் அதுல்யா, ரம்யா பாண்டியன், சுனைனா போன்றவர்கள் கலந்து கொள்ள போவதாக செய்திகள் வெளியானது. ஆனால், இந்த தகவலை மூவரும் மறுத்தனர்.

இப்படி ஒரு நிலையில் விஜய் டிவியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அமுதவாணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக பேசப்பட்டு வருகிறது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொள்வது வாடிக்கையான ஒன்று தான். இரண்டாவது சீசனில் பாலாஜி, மூன்றாவது சீசனில் கவின், சாண்டி என்று விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement