பிக் பாஸ் வீட்ற்க்குள் மீண்டும் நுழைந்த எலிமினேட்டட் போட்டியாளர் – இவர் தான் வைல்ட் கார்டா ?

0
262
abhishek
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த மாதம் கோலாகலமாக ஒளிபரப்பப்பட்டது. கடந்த சீசன்களில் விட இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த முறை பிக்பாஸ் சீசனில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். வழக்கம்போல் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்களிலேயே போட்டியாளர்களுக்குள் புகை தொடங்கியது. மேலும், நாளுக்கு நாள் நிகழ்ச்சியில் போட்டிகள் கடுமையாக இருப்பதால் போட்டியாளர்களுக்குள் வன்மம் தொடங்கிவிட்டது. இதனால் ஒருவருக்கொருவர் கடும் கோபத்திலும் வன்மத்திலும் தாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அடுத்து எந்த போட்டியாளர்களுக்குள் கலவரம் வெடிக்க போகும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளார்கள்.

-விளம்பரம்-

மேலும், நிகழ்ச்சியில் முதலில் நதியா சாங்க் வெளியேறினார். பின் அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா என பல போட்டியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் பிரபலம் ஒருவர் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்துள்ள promo ஒன்று வெளியாகி உள்ளது. தற்போது இந்த ப்ரோமோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது வைல்ட் கார்டு என்ட்ரி ஆக ஒரு பிரபலம் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

- Advertisement -

அவருடைய முகத்தை காண்பிக்காமல் பாக்சில் இருந்து அவர் வெளியே வருமாறு புரோமோ வெளியாகி இருக்கிறது. அவர் வேறு யாரும் இல்லை, பிக் பாஸ் 5 வது சீசனில் இருந்து வெளியேறிய அபிஷேக் தான் என்று கூறப்படுகிறது. அவர் தான் பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் நுழைந்துள்ளார். இவரைக் கண்டதும் போட்டியாளர்கள் பயங்கரமாக கத்தி சந்தோஷப்படுகிறார்கள். போட்டியாளர்கள் மட்டுமில்லாமல் இதை பார்க்கும் ரசிகர்களுக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி என்று சொல்லலாம்.

மேலும், வெளியே சென்று மீண்டும் உள்ளே வந்த அபிஷேக் ராஜா பிக் பாஸ் வீட்டில் எப்படி எல்லாம் விளையாடப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அபிஷேக் ராஜா யூடுப் பிரபலம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதத்தால் பலரிடம் வெறுப்பை சம்பாதித்து இருக்கிறார். இதனாலேயே இவரை சீக்கிரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினார்கள்.

-விளம்பரம்-
Advertisement