பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமிதா மாரிமுத்து வெளியேறியதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் வெளியேறியதற்கான காரணம் வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த 3 ஆம் தேதி மாலை கோலாகலமாக துவங்கியது. கடந்த சீசனை விட இந்த சீசனில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி இருக்கின்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்களை போல முகம் தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்கள் என்றால் அது விஜய் டிவி பிரியங்கா, சின்னத்தம்பி பவானி, நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு, கனா காணும் சீரியல் நடிகர் ராஜீவ் ஜெயமோகன், இமான் அண்ணாச்சி என்று ஒரு சிலரை மட்டும் தான் சொல்ல முடியும். மீதமுள்ள பல போட்டியாளர்கள் யார் என்பதே தெரியவில்லை.
இதையும் பாருங்க : கணவர் இறப்பிற்கு பின் ஒருவரை அவள் விரும்பினால், ஆனால் – பவானியின் அக்கா வெளியிட்ட பதிவு.
அதிலும் இந்த சீசனில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் இறக்கின்றனர். மேலும், தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறையாக இந்த சீசனில் முதல் திருநங்கையாக நமிதா மாரிமுத்து என்ற ஒரு திருநங்கை போட்டியாளரும் கலந்து கொண்டு இருந்தார். கடந்து வந்த பாதை டாஸ்க்கில் இவர் பேசிய இவரது கதையை கேட்டு பலரும் கண் கலங்கினர்.
இப்படி ஒரு நிலையில் இவர் நேற்றய நிகழ்ச்சியில் இவர் சில தவிர்க்கமுடியாத காரணத்தால் வெளியேறி இருப்பதாக பிக் பாஸ் அறிவித்தார். நமீதாவிற்கு தீவிரமான தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் அவர் வலியில் துடித்ததால் அவர் பனிமலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் உடல் நலம் தேறி சாதாரண பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால், அவர் உடல் நலம் பெற்றவுடன் மீண்டும் பிக் பாஸில் இணைவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.