ஏன் இப்படி பாரபட்சமா இருக்கீங்க – ஆளுமை விசயத்தில் பிக் பாஸிடம் நச்சுன்னு கேள்வி கேட்ட பாவனி. வைரலாகும் Unseen வீடியோ.

0
349
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் பஞ்ச தந்திர காயின்களை வைத்திருக்கும் போட்டியாளர்களுக்கு வாரா வாரம் ஆளுமை கொடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நிரூப், பாவனி, இசைவாணி போன்றவர்கள் வைத்திருந்த காயினின் அடிப்படையில் அவர்களுக்கு ஆளுமை வழங்கப்பட்டு விட்டது. இதில் இவர்கள் இருவருமே தங்கள் ஆளுமைகளை சரியாக செய்யவில்லை என்று போட்டியாளர்கள் பலர் கூறி இருந்தனர். இப்படி ஒரு நிலையி நேற்று நீரின் காயினை வைத்திருந்த வருணுக்கு ஆளுமை அறிவிக்கப்பட்டது.

-விளம்பரம்-

இந்த ஆற்றல் மூலம் பிக் பாஸ் வீட்டில் நீரை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை வருண் தான் முடிவு செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இதுவரை ஆளுமை வழங்கப்பட்ட நபர்களுக்கு அளிக்கப்பட்ட விளக்கத்தை விட வருணிற்கு அளிக்கப்பட்ட விளக்கம் மிகவும் தெளிவாக குறிப்பிடபட்டு இருந்தது.

இதையும் பாருங்க : நீங்கள் கேட்ட பாடல் விஜய் சாரதியை ஞாபகம் இருக்கா ? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா ? லேட்டஸ்ட் வீடியோ இதோ.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து Unseen வீடியோ ஒன்றில் புலம்பி இருக்கிறார் பாவனி, அதில் அவர் எனக்கு கஷ்டமாக இருக்கிறது பிக் பாஸ். ஆகாயம் ஆளுமை போது நீங்க வந்து எனக்கு இந்த மாதிரி எதுவுமே கொடுக்கவில்லை. ஆனால், அவரும் ரொம்ப திறமையாக பயன்படுத்துகிறார் இதனால் நான் உண்மையாக வருந்துகிறேன்.

இவ்வளவு விளக்கமாக எனக்கு ஆகாயம் போது கொடுக்கவே இல்லை. நீங்கள் மிகவும் பாரபட்சமாக இருப்பது போல இப்போது எனக்கு தோன்றுகிறது பிக் பாஸ்’ என்று பிக் பாஸயே நச்சென்று கேள்வி கேட்டிருக்கிறார் பாவனி. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவ தற்போது பாவனிக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

-விளம்பரம்-
Advertisement