உங்ககிட்ட எந்த Tricks உம் பண்ணலனு சொன்னதுக்கு காரணம் இதான். அத டிவில காட்டல – ராஜு முகத்திரையை கிழித்த சுருதி.

0
592
suruthi
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை தெரிந்த முகங்களை விட தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அந்த வகையில் தெரியாத முகங்களில் ஒருவர் தான் ஸ்ருதி. இவர் மாடலும், விளம்பர நடிகையும் ஆவார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்று சொல்லலாம். பிக்பாஸ் வீட்டில் கடந்து வந்த பாதை டாஸ்கில் ஸ்ருதி தன்னுடைய கடந்த காலத்தை பற்றி கூறியிருந்தார். இதன் மூலம் இவர் மக்களின் அனுதாபங்களையும் பிரபலத்தையும் பெற்றிருந்தார்.

-விளம்பரம்-

பின் பஞ்சபூத டாஸ்க்கில் நாணயம் எடுப்பதில் இவருக்கும் தாமரைக்கும் இடையே சர்ச்சை எழுந்தது அனைவருக்கும் தெரிந்தது. இதனால் கமலஹாசன் அவர்கள் ஸ்ருதியை பாராட்டி விளையாட்டை விளையாட்டாக தான் பார்க்க வேண்டும் என்று கூறி இருந்தார். மேலும், யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஸ்ருதி கடந்த வாரம் எலிமினேட் ஆகி இருந்தார். அப்போது ஸ்ருதி வீட்டை விட்டு வெளியே வரும் போது நான் உங்களிடம் எந்த ட்ரிக்கும் பண்ணவில்லை என்று ராஜு இடம் சொல்லியிருந்தார்.

- Advertisement -

ஆனால், அதனை பார்த்த நமக்கும் சரி, ராஜூவுக்கும் சரி புரியவில்லை. இந்நிலையில் அதற்கான விளக்கத்தை ஸ்ருதி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, இந்த விஷயம் டிவியில் டெலிகாஸ்ட் ஆனதா? இல்லையா? எனக்கு தெரியவில்லை. நிரூப், அக்ஷராவுக்கு ஒரு டாஸ் கொடுத்திருந்தார். அது என்னவென்றால், பவானிக்கு, அக்ஷரா மீசை வரைய வேண்டும். பவானி எப்பவுமே விளையாட்டை விளையாட்டாக தான் பார்ப்பார். அதனால் அக்ஷரா மீசை வரைய ஒத்து கொண்டார். பிறகு நிருப், அக்ஷராவுக்கு மீசை வரைய வேண்டும் என்று ராஜுவிடம் சொன்னார்.

ஆனால், அக்ஷரா மீசை வரைய ஓத்துக்கொள்ள கூடாது என்று இருவரிடமும் தனியாக டாஸ்க் கொடுத்து இருந்தார். ஆனால், இந்த விஷயம் வீட்டில் இருந்த எங்கள் யாருக்குமே தெரியாது. ரொம்ப நேரமாக அவர்கள் இருவரும் இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். பின் ராஜு , அக்ஷராவுக்கு மீசை வரைய வில்லை. மேலும், ராஜு அவர்கள் உனக்கு அசிங்கமா இல்லையா? அக்ஷரா மீசை வரை ஏன் ஒத்துக்கொண்டாய்? அவள் வரையவில்லை பார் என்று பவானி இடம் சொன்னார்.

-விளம்பரம்-

உடனே நான் அவள் அசிங்கப்பட தேவை இல்லை. நீங்க தான் அசிங்கப்படனும், அவளுக்கு கொடுத்த டாஸ்கை அவள் செய்து விட்டாள். ஆனால். நீங்கள் தான் உங்களுக்கு கொடுத்ததை டாஸ்கை செய்யவில்லை என்று சொன்னேன். ஆனால், அப்போது ராஜு எதுவுமே என்னிடம் பேசவில்லை. அடுத்த நாள் நான் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தேன். நான் குடித்துக் கொண்டிருக்கிறது கூட அவர்களுக்கு தெரியவில்லை. அப்போது அண்ணாச்சி, வருண், சிபி, ராஜு இவர்கள் 4 பேரும் எப்போதுமே ஒன்றாக தான் பேசிக் கொண்டிருப்பார்கள்.

அப்போது ராஜு அவர்கள் ஸ்ருதி ட்ரிக்ஸ் பண்ணுகிறார். அசிங்கமா இல்லையா என்று என்னிடம் சொல்லி ட்ரிக்ஸ் பண்ணி கேம் விளையாடுகிறார் என்று சொன்னார். அந்த மாதிரி எந்த ஒரு ட்ரிக் பண்ணனும் எனக்கு அவசியமில்லை. நான் நினைக்கவில்லை. ஆனால், அவர் அதை தப்பாக புரிந்து கொண்டார். நான் எதார்த்தமாக தான் சொன்னேன் என்று ஸ்ருதி விளக்கம் அளித்திருந்தார். தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement