விக்ரம் வெற்றி, மீண்டும் துவங்க அடுத்தடுத்த படங்கள், பிக் பாஸ் 6ல் Host யார் ? எந்த டிவியில் ? – கமலே கொடுத்த சூப்பர் அப்டேட்.

0
302
biggboss
- Advertisement -

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி குறித்து கமல் கொடுத்த அப்டேட் வைரலாக பரவி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜிவ் முதல் இடத்தையும், இரண்டாம் நிகழ்ச்சியில் பிரியங்காவும் பிடித்தார்கள். இதனை தொடர்ந்து தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ottயில் ஒளிபரப்பானது. இதை தொடர்ந்து இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிவந்தது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-504-1024x535.jpg

இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி இருந்தனர். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, தாமரை, சுரேஷ் ஷாரிக், நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர். பின்னர் வைல்ட் கார்ட் போட்டியாளராக ரம்யா பாண்டியன், சதிஷ் போன்றவர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் பாருங்க : மீண்டும் வானத்தை போல சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க?

- Advertisement -

தொகுத்து வழங்கிய சிம்பு :

ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிக்கு பெரிதாக வரவேற்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், நாட்கள் செல்ல செல்ல இந்த நிகழ்ச்சி சூப்பர் ஹிட் அடித்தது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியையும் கமல் தான் தொகுத்து வழங்கி இருந்தார். பின்னர் விக்ரம் பட ஷூட்டிங் காரணமாக திடீரென்று விலகினார் கமல். பின்னர் அவருக்கு பதிலாக சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

biggboss

சீசன் 6 பற்றிய தகவல் :

மிகவும் பரபரப்பாக சென்ற இந்த சீசனில் முதல் பரிசை பாலாஜி முருதாசும் இரண்டாம் இடத்தை நிரூப்பும் பிடித்து இருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவைடந்ததால் பிக் பாஸ் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் ஆழ்ந்தனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் 6 பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் 6 நிகழ்ச்சி வரும் ஜூலை மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் முதல் பாதியிலோ துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

கமல் சொன்ன தகவல் :

இப்படி ஒரு நிலையில் விக்ரம் படத்தின் சக்ஸஸ் மீட்டில் பங்கேற்ற கமல் பிக் பாஸ் 6 குறித்து பேசியுள்ளார். அதில் ‘ பிக் பாஸ் சீசன் 6 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், நான் தொகுத்து வழங்குவேன் என்று கமல் ஹாசன் கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 6 விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகுமா என்று சந்தேகத்தில் இருந்த பலருக்கும், கமல் ஹாசனின் பதில் ஒரு முடிவை தந்துள்ளது.’ ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தி இருக்கிறது.

சீசன் 6 Anchor கமலா ? சிம்புவா ? :

இந்த சீசனில் யார் யார் எல்லாம் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்று ஆர்வம் தற்போதில் இருந்து ஆரம்பித்துவிட்டது. மேலும், இந்த சீசனை கமல் தொகுத்து வழங்குவாரா அல்லது சிம்புவே தொடர்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நடிகர் கமல் தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்துவிட்டார். இந்தியன் 2 படமும் தற்போதைக்கு கிடப்பில் தான் இருக்கிறது. எனவே, இந்த சீசனில் கமல் தொகுத்து வழங்குவது சாத்தியம் தான்.


Advertisement