என் வெற்றிக்கு தடையாக இருப்பது அர்ச்சனா தான் – கமலிடம் புலம்பிய டைட்டில் வின்னர் விக்ரம்.

0
609
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 9வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

தற்போது பிக் பாஸ் வீட்டில் விஜய் வர்மா, அனன்யா, விசித்ரா, தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ், மணி, ரவீனா, மாயா, பூர்ணிமா, நிக்சன், விக்ரம்,விஷ்ணு ஆகிய 13 பேர் மட்டும் உள்ளே இருக்கின்றனர். இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் நிக்சன், அர்ச்சனா, தினேஷ், விசித்ரா, மணி ஆகிய 5 பேர் நாமினேட் ஆகி இருகின்றனர். மேலும், இதில் மணி அல்லது நிக்சன் இருவரில் தான் கண்டிப்பாக ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து அறிவித்த விஜய் டிவி ‘மிக்ஜாம் புலன் காரணமாக பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க இயலாததால், இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது’ என்று அறிவித்து இருந்தது. இந்த வாரம் நிக்சன் தான் நிச்சயம் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் விஜய் டிவி இப்படி ஒரு ட்விஸ்டை கொடுத்துவிட்டது.

நேற்றைய நிகழ்ச்சியில் அர்ச்சனாவை கேவலமாக பேசிய நிக்சனை வறுத்தெடுத்ததை விட தினேஷ், அர்ச்சனா, மணி ஆகியோரை தான் கமல் வறுத்தெடுத்தார். அதிலும் குறிப்பாக நிக்சனுக்கு ஏதோ கடமைக்கு Yellow Card காண்பித்துவிட்டு இனி அப்படி பேசாதீர்கள் என்று சொல்லிவிட்டார். ஆனால், ஆட்டிகிட்டு, தொளலத் போன்ற வார்த்தைகளை பேசிய தினேஷை கடுமையாக விமர்சித்தார் கமல்.

-விளம்பரம்-

அதிலும் நார்த் மெட்ராஸில் இப்படி தான் பேசுவார்கள் என்று சொல்ல நீங்கள் யாரு என்றெல்லாம் கேட்டு இருந்தார். கமல், பிக் பாஸ் நிகழ்ச்சியை தனது அரசியல் ஆதாரத்திற்காக பல முறை பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியில் மணி, நிக்சன் பற்றி ‘அவரது True Colour’ வெளியில் வருகிறது என்ற சொன்னதை குறிப்பிட்ட கமல், true colour என்றால் என்ன அவர் எந்த ஏரியா என்பது முக்கியமல்ல, ஒரு ஏரியாவை பொறுத்து ஒருவரை Brand செய்யாதீர்கள்.

இனி அப்படி பேசாதீங்க நிக்சன், இல்லை என்றால் உங்களை இப்படி தான் Brand செய்வார்கள் என்று நிக்ஸ்னுக்கு ஆதரவாக பேசி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ‘உங்கள் வெற்றிக்கு தடையாக இருப்பவர்கள் யார் என்று கமல் கேட்டுள்ளார். அதற்கு விக்ரம், நிக்சன் ஆகியோர் அர்ச்சனா பெயரை சொல்லியுள்ளனர். அதே போல பூர்ணிமா,, விஷ்ணு பெயரை சொல்லியுள்ளார்.

Advertisement