‘எனக்கு பிளாக் ஆகுது சார், தண்ணி குடிச்சிட்டு வரேன்’ – பேசமுடியாமல் அழுத பூர்ணிமா.

0
185
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 44 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் டாஸ்கில் தினேஷ் வெற்றிபெற்றார். தினேஷ் வெற்றி பெற்ற இந்த வாரம் பிக் பாஸ் வீடு, பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் என்று வேற்றுமை இல்லாமல் ஒரே வீடாக இருக்கும் என்று அறிவித்தார் பிக் பாஸ். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களைப் போலவே நடந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதே டாஸ்க் ஒரு இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியே சுவாரசியம் இல்லாமல் சென்றது என்று தான் கூற வேண்டும் இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் முழுதும் நடைபெற்ற டாஸ்கில் சுவாரசியம் குறைவாக இருந்த போட்டியாளர்கள் இருவரை பிக் பாஸ் தேர்ந்தெடுக்க சொன்னார். இதில் பெரும்பாலானோர் அர்ச்சனா மற்றும் விசித்ராவை தேர்ந்தெடுத்தனர்.

ஆனால், எங்களை விட பிராவோ, அக்ஷயா, விக்ரம் எல்லாம் நன்றாக செய்துவிட்டார்களா என்று வாக்குவாதம் செய்த விசித்ரா, தன்னால் சிறைக்கு செல்ல முடியாது என்று தர்னா செய்தார். இந்த பிரச்சனை ஒரு பாதி நாள் ஓடிக்கொண்டு இருக்க நேற்று நடைபெற்ற இந்த வார தலைவருக்கான போட்டியில் நிக்சன் , தினேஷ் கூல் சுரேஷ் ஆகிய மூவர் பங்கு பெற்றார்கள். இந்த முறை எப்படியாவது ஜெயித்துவிடு என்று பூர்ணிமா நிக்சனுக்கு பூஸ்ட் எல்லாம் கொடுத்து அனுப்பி வைத்தார்.

-விளம்பரம்-

ஆனால் இந்த டாஸ்க் தினேஷ் வெற்றி பெற்று மீண்டும் இந்த வார தலைவரானார். இதனால் பூர்ணிமா மற்றும் மாயா இருவருக்குமே பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இதனை தொடர்ந்து ஸ்டார் அதிகம் பெற்று இருக்கும் போட்டியாளர்கள் அவர்களுக்குள் கலந்துபேசி ஒருவருக்கும் ஸ்டார் கொடுக்கலாம். அந்த ஒரு நபர் இரண்டு நபரை அடுத்த வார நாமினேஷனுக்கு நேரடியாக நாமினேட் செய்யலாம் என்ற பவர் கொடுக்கப்பட்டது.

இதில் மணி, ரவீனா, விசித்ரா ஆகியோர் விஷ்ணுவிற்கு தங்கள் ஸ்டாரை கொடுத்தனர். இதில் விஷ்ணு யாரை அடுத்த வார நாமினேஷனுக்கு தேர்ந்தெடுக்க போகிறார் என்பது தெரியவில்லை. இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பூர்ணிமாவை அனைவரும் குறை சொல்ல, அதனை தாங்க முடியாத பூர்ணிமா ‘எனக்கு பிளாக் ஆகுது சார், தண்ணி குடிச்சிட்டு வரேன்’ என்று கமல் முன்பு பேசி இருக்கிறார்.

Advertisement