ஒட்டு மொத்த வீட்டிற்கே ஆப்பாக வந்த டாஸ்க் – போட்டியாளர்கள் ரூமில் அடைத்து டார்ச்சர்.

0
1782
- Advertisement -

பிக் பாஸ் வீடு இம்முறை இரண்டு வீடுகளாக பிரிந்து இருக்கிறது. ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்படும் போட்டியாளர்கள் தான் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் கொடுக்கும் மெனுவை சமைக்க வேண்டும் என்ற ரூலும் இருக்கிறது. இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டினுள் விஜய் வர்மா, கூல் சுரேஷ், பிரதீப், அக்ஷயா, விஷ்ணு, மாயா ஆகியோர் இருக்கின்றனர். ஸ்மால் பாஸ் வீட்டில் சென்றதில் இருந்தே இவர்கள் அனைவரும் பிக் பாஸ் நபர்களுடன் சண்டையிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

அதிலும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் கொடுக்கும் மெனுவை தான் இவர்கள் சமைக்க வேண்டும். ஆனால், இவர்கள் எங்களால் ஆளாளுக்கு தனி தனியாக சமைக்க முடியாது, நாங்கள் சமைத்து மட்டும் தான் போட வேண்டும் ருசியாக சமைக்க வேண்டும், கிச்சனை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ரூல் எல்லாம் கிடையாது என்று நேற்று பிக் பாஸ் வீட்டில் ஸ்ட்ரைக் செய்து சமைக்காமல் இருந்தனர்.

- Advertisement -

இதனால் பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் பசியில் வாடினர். ஆனால், ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் மட்டும் வீட்டில் இருந்த பழங்களை எடுத்து சாப்பிட்டுக்கொண்டனர். இதனால் பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் வீட்டார் இடையில் பெரும் சண்டை வெடித்து இருந்தது . அதுவும் நேற்றய நிகழ்ச்சியில் சமையல் செய்ய மாட்டேன் என்று பிரதீப் வாக்குவாதம் செய்துகொண்டு இருந்தார். கடுப்பான ஜோவிகா சமையல் செய்வது தான் உன் வேலை,நாங்க சொன்னா அத நீ செஞ்சி தாண்டா ஆகனும் மூடிட்டு பண்ணு என்று வயது வித்யாசம் பார்க்காமல் பேசி இருந்தார்.

ஆனால், ஜோவிகா அப்படி பேசியதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அவ்வளவு ஏன் சம்மந்தப்பட்ட பிரதீப் கூட எதையும் கேட்கவில்லை. இப்படியாக நேற்றய எபிசோட் மிகவும் கலவரமாக முடிந்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் இன்று வெளியாகி இருக்கும் இரண்டாம் ப்ரோமோவில் போட்டியாளர்களை ரூமில் அடைத்து பாடல் மற்றும் லைட்டை எல்லாம் போட்டு டார்ச்சர் செய்துள்ளனர். இதில் தோற்றால் ஒட்டு மொத்த லக்ஸரி பட்ஜட்டும் போய் விடும் என்று ஆப்படித்து இருக்கிறார் பிக் பாஸ்.

-விளம்பரம்-

இது ஒருபுறம் இருக்க கடந்த திங்கள் கிழமை இரண்டாம் வாரத்திற்கான நாமினேசன் நடைபெற்று இருந்தது. அதில் அக்ஷயா, விசித்ரா, ஜோவிகா, பூர்ணிமா விஷ்ணு, மாயா, பிரதீப் ஆகியோர் நாமினேட் ஆகிருக்கிறார்கள். இந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்த மாயாவின் பெயர் இடம் பெற்று இருக்கிறது. எனவே,அவர் அல்லது பூர்ணிமா தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்த்தனர்.

மேலும், பல தனியார் வலைத்தளங்களில் நடைபெற்ற ஓட்டிங்கில் கூட மாயா மற்றும் பூர்ணிமாவிற்கு தான் குறைவான வாக்குகள் தற்போது பதிவாகி வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பவா செல்லத்துரை பிக் பாஸ் வீட்டில் இருந்து தாமாக முன் வந்து வெளியேறியதால் இந்த வாரம் எலிமினேஷனும் இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் மாயா தப்பித்து விட்டார் என்று கூறி வருகின்றனர்.

Advertisement