விக்னேஷ் சிவன்,நயன்தாரா மீது சொத்து அபகரிப்பு புகார் – பெரியப்பா சொன்ன ஷாக்கிங் உண்மை

0
1700
Nayanthara
- Advertisement -

சொத்து பிரச்சனை விவகாரம் தொடர்பாக விக்னேஷ் சிவன் மீது அவருடைய பெரியப்பா அளித்து இருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விக்னேஷ் போலீஸில் சிவனின் தந்தை சிவக்கொழுந்துடன் பிறந்தவர்கள் 9 பேர். இதில் விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் அவரது மனைவியுடன் லால்குடியிலும், அவரது சித்தப்பா குஞ்சிதபாதம் தனது மனைவி சரோஜாவுடன் கோவையிலும் வசித்து வருகின்றனர்கள்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் விக்னேஷ் சிவனின் சித்தப்பா குஞ்சிதபாதமும் அவருடைய மனைவி சரோஜா இருவரும் சேர்ந்து லால்குடி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்திருக்கிறார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பது, எங்களுக்கு தெரியாமல் என்னுடைய தம்பி சிவக்கொழுந்து எங்கள் பொது சொத்தை ஏமாற்றி விற்று விட்டார். மோசடியாக விற்ற சொத்தை சிவக்கொழுந்து அவர்களுடைய வாரிசுக்கு கொடுத்துவிட்டார்.

- Advertisement -

விக்னேஷ் சிவன் சொத்து விவகாரம்:

இவர்களுடைய வாரிசுகளான மனைவி மீனா குமாரி, மகன் விக்னேஷ் சிவன், மகள் ஐஸ்வர்யா ஆகியோரின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும், நிலத்தை வாங்கியவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை செலுத்தி நிலத்தை மீட்டு முழுமையாக எங்களுக்கு கிடைக்க அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும்.
அதோடு அவர்கள் மீது கிரிமினல் மோசடி வளர்க்கும் தொடர வேண்டும் என்று கூறி இருந்தார்கள்.

குஞ்சிதபாதம் அளித்த புகார்:

இதனிடையே இந்த வழக்கு குறித்து உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சொத்தில் ஒரு பங்கு சிவக்கொழுந்துக்கும் மீதி 8 பேருக்கும் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் விக்னேஷ் சிவனின் சித்தப்பா குஞ்சிதபாதம் தற்போது விக்னேஷ் சிவன் குறித்து பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர், எனக்கு இருதயத்தில் நான்கு குழாய்களும் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.

-விளம்பரம்-

விக்னேஷ் சிவன் மீது வழக்கு:

இதற்காக தான் நான் எனக்கு சேர வேண்டிய சொத்தை விற்க முடிவு செய்தேன். ஆனால், விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து சொத்தை ஏமாற்றி விற்று இருக்கிறார். இது குறித்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றத்தில் சொத்தில் ஒரு பங்கு மட்டுமே சிவக்கொழுந்துக்கு உரிமை உண்டு என்றும் மீதி மற்ற எட்டு பேருக்கும் உரிமை இருக்கிறது என்றும் தீர்ப்பு வந்தது. இது குறித்து நாங்கள் பலமுறை விக்னேஷ் சிவனிடம் கூறினோம்.

குஞ்சிதபாதம் அளித்த பேட்டி:

அவர் எங்கள் பிரச்சனை கண்டுகொள்ளவில்லை. அதற்கு ஒரு முடிவு எடுக்கவும் இல்லை. மேலும், விக்னேஷ் சிவன் மற்றும் அவரது தாயார் மீனாகுமாரி உதவினால் மட்டுமே இந்த பிரச்சினை தீரும். எனவே விக்னேஷ் சிவன் சொத்தை விற்க உதவ வேண்டும். எனக்கு எந்த வாரிசும் இல்லை. தயவு செய்து உதவுங்கள் என்று கண்ணீர் மல்க கூறி இருக்கிறார். இதற்கு விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement