அமர்களமாக தொடங்க இருக்கும் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி, என்ன தேதி தெரியுமா? வெளியான அதிரடி அப்டேட்

0
388
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்த செய்தி தான் அதிகமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியிருந்தார். ஆனால், கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சி தான்.

-விளம்பரம்-

இதை அடுத்து யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள்? என்ற கேள்வி எழுந்தது. அதன் பின் இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார் என்று சேனல் தரப்பில் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருந்தது. இதனால் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாகவும், விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, இந்த நிகழ்ச்சிக்காக சினிமா பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், சாதாரண மக்கள் என எல்லா தரப்பில் இருந்தும் சில பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 8:

இதுவரை இந்த சீசனில் நடிகர் அருண், சீரியல் நடிகர் தீபக், வினோத் பாபு, பவித்ரா ஜனனி, அர்னவ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று ஏற்கனவே கூறியிருந்தார்கள். இவர்களை தொடர்ந்து நடிகர் ரஞ்சித் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வார் என்று கூறப்படுகிறது. அதன் பின் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான மகாராஜா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக சச்சிதா நடித்திருந்தார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இளம் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருக்கிறார். அதன் பின் நடிகர் ரியாஸ்கான் பெயர் அடிபடுகிறது. இவருடைய மகன் சாரிக் ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அனைவரும் அறிந்தது. அதேபோல் தொகுப்பாளர் ஜெகனும், தொகுப்பாளினி ஜாக்லின் இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவர்களை தொடர்ந்து குக் வித் கோமாளி சுனிதா, சந்தோஷ் பிரதாப் ஆகியோர் பெயர்களும் அடிபட்டு வருகிறது.

-விளம்பரம்-

போட்டியாளர்கள் விவரம்:

இவர்களை தொடர்ந்து காமெடி நடிகர் செந்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
இது குறித்து சேனல் தரப்பில் அவரிடம் பேசி சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அதோடு நடிகர் செந்தில் அவர்கள் ஏற்கனவே விஜய் டிவியின் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். தற்போது பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் அவர் என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

BiggBoss

நிகழ்ச்சி அப்டேட்:

இவர்களில் யாரெல்லாம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். கிட்டத்தட்ட போட்டியாளர்கள் தேர்வு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்க இருக்கும் தேதி குறித்த அப்டேட் தான் தற்போது வெளியாக இருக்கிறது. வருகிற அக்டோபர் முதல் வாரம் அதாவது ஆறாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் 8 ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை சேனல் தரப்பில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Advertisement