அவர் வெளிய வந்து உங்க ட்வீட்ல்லாம் பாத்து திட்ட மாட்டாரா – அபிஷேக்கை கழுவி ஊற்றியது குறித்து கேட்ட ரசிகர். பிரசாந்த் பதில்.

0
1424
abhishek
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் இரண்டு வாரத்தை நிறைவு செய்து இறுகிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பல பரிட்சயமான பல போட்டியாளர்களால் கலந்துகொண்டு இருந்தாலும் யூடுயூபில் விமர்சனங்களை பார்க்கும் நெட்டிசன்களுக்கு அபிஷேக் ராஜாவை பற்றி நிச்சயம் தெரிந்து இருக்கும். யூடுயூபில் தன்னை ஒரு அதி மேதாவி போல உணர்ந்து கொண்டு பிரபலங்களிடம் அடிக்கடி மொக்கை வாங்கி வரும் சினிமா பையன் என்று தனக்கே செல்லப் பெயர் வைத்துகொண்ட அபிஷேக்கை அறியாத வலைதள வாசிகள் இருக்க முடியாது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-170-1024x541.jpg

அதுவும் இவர் பிரபலங்களை பேட்டி எடுக்கும் போது அவர்களிடம் இவர் கொடுக்கும் ரியாக்ஷன்களில் கண்டு கடுப்பாகத்தவர்கள் இருந்திருக்க மாட்டார்கள். அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் ஆன்டனி பேட்டி ஒன்றில் இவர் பாடிய ‘வெயிலோடு விளையாடி’ பாடலை பலரும் வச்சி செய்தனர்.

- Advertisement -

பொதுவாக பிக் பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு உள்ளே சென்று அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே ஹேட்டர்ஸ்கள் உருவாவார்கள். ஆனால், உள்ளே செல்லும் போதே ஹேட்டர்ஸ்களுடன் சென்றவர் அபிஷேக் தான். அதிலும் இவர் பிக் பாஸில் நடந்து கொள்ளும் விதத்தால் பலரும் இவரை மேலும், வெறுக்கத் துவங்கி இருக்கின்றனர்.

இப்படி ஒரு நிலையில் இவரை தொடர்ந்து திட்டி தீர்த்து வருகிறார் பிரபல யூடுயூப் விமர்சகரான பிரசாந்த். நேற்று வெளியான ப்ரோமோவில் டாஸ்கில் பர்சனல் விஷயத்தை பற்றி பேச வேண்டாம் என்று அண்ணாச்சி கூறியதர்க்கு அவரிடம் சண்டையிட்ட அபிஷே, இப்போ கதவ தொறந்தா கூட நான் வெளிய போய்டுவேன்னு என்று அண்ணாச்சியிடம் சண்டையிட்டார்.

-விளம்பரம்-

இதை கு றிப்பிட்டுள்ள பிரசாந்த், அப்புறம் எதுக்குடா உள்ளே போன அபிஷேக் வெண்ணெய் வாய் இருக்குன்னு எதனா பேசிட்டு என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ட்விட்டர் வாசி, அண்ணா, அபிஷேக் வெளிய வந்து உங்க ட்வீட் எல்லாம் பாத்தா சண்ட போட மாட்டாரா ? உங்க நண்ப ராச்சே என்று ட்வீட் செய்ய அதற்கு பிரசாந்த், அவன் கெடக்கரான் என்று பதில் கொடுத்துள்ளார்.

Image

அபிஷேக் பற்றி பிரசாந்த் இப்படி ட்வீட் போடுவது முதல் முறையல்ல. அபிஷேக் ராஜா பிக் பாஸில் கலந்துகொள்ள போகிறார் என்ற பிரசாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்து இருந்தார்.அதில், அபிஷேக் ராஜாவை நினைத்து பாவமாக இருக்கிறது அவரை தனிப்பட்ட முறையில் தெரியும் 24 மணி நேரமும் 20 கேமராவுக்கு முன்னால் அவர் கண்டிப்பாக ரசிகர்களை எரிச்சல் மட்டும் தான் அடையச் செய்வார். நான் சொல்வது தவறு என்று நிரூபித்தால் மகிழ்ச்சிதான் என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிபிடத்தக்கது

Advertisement