‘விஜய் சார் பிக் பாஸ் பாக்குறாரா’ – உள்ள நுழைந்த விஜய்யின் நெருங்கிய நண்பர். குஷியான போட்டியாளர்கள்.

0
408
vijay
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி 53 நாட்களை கடந்து பயங்கர விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்து இன்று வரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் முகம் தெரிந்த நபர்களை விட தெரியாத நபர்கள் தான் அதிகம் கலந்து கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள்.

-விளம்பரம்-

வழக்கம் போல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு சச்சரவும் சலசலப்பும் தொடங்கி விட்டது. அதிலும் நாட்கள் செல்ல செல்ல போட்டிகளும், சவால்களும் அதிகமாகி வருவதால் போட்டியாளர்கள் மத்தியில் வன்மம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும், வார வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒருவர் எலிமினேட் செய்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் 18 பேருடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 8 பேர் எலிமினேட் ஆகி தற்போது இரண்டு பேர் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக வந்து இருக்கிறார்கள். இரண்டாவது எலிமினேட் ஆன அபிஷேக் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்திருக்கிறார். பின் சில தினங்களுக்கு முன்பு அமீர் என்ற நடனக் கலைஞரும் வீட்டிற்குள் வைல்ட் கார்ட்டு என்ட்ரி கொடுத்திருக்கிறார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்த நிலையில் நிகழ்ச்சியில் மீண்டும் ஒருவர் வைல்ட் கார்ட்டு என்ட்ரீ கொடுக்க இருக்கிறார். அது வேறு யாரும் இல்லை விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ் தான். உள்ளே நுழைந்த சஞ்சீவ், விஜய் தவறாமல் பிக் பாஸ் பார்க்கிறார் என்று கூறியுள்ளார். மாஸ்டர் படத்தில் சஞ்சீவ் மற்றும் சிபி ஆகிய இருவரும் நடித்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement