விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனிற்கான பணிகள் நேற்று (மே 8)துவங்கியது. இதற்கான செட் அமைக்கும் பணிகள் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வழக்கம் போல விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த இரண்டு சீசனை போல கமல்தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் துவங்க இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் போட்டியாளரை பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்க : உடல் எடை குறைத்து மீண்டும் இளமையான தோற்றத்திற்கு திரும்பிய சோனியா அகர்வால்.!
சமீபத்தில் வந்த தகவலின்படி பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக நடிகை சாந்தினி தமிழரசன் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.சாந்தினி தமிழரசன் தமிழில் வில் அம்பு, ராஜா ரங்குஸ்கி சீரியல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடன இயக்குனரான நந்தா என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
சாந்தினி தமிழரசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அதேபோல பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் பிரபல நடிகைகளான சுதா சந்திரன், லைலா, சாக்ஷி அகர்வால் போன்றவர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் படுமும்முரமாக நடைபெற்று வருகிறதாம் அதேபோல விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புரோமோ வீடியோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.