கடந்த சீசன் மஹா ராணி டாஸ்க்.! இந்த சீசன் மஹாராஜா டாஸ்க்.!

0
4928
tharshan
- Advertisement -

கடந்த மூன்று மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இறுதி வாரத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 6 போட்டியாளர்கள் மட்டும் மீதமுள்ள நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டு பினாலே டாஸ்கில் முகென் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதி வாரம் என்பதால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள முகெனை தவிர மீதம் இருக்கும் 5 போட்டியாளர்கள் அனைவரும் இந்த வார எலிமினேஷனுக்கு நேரடியாக நாமினேட் ஆகியுள்ளனர்.

- Advertisement -

எனவே, இந்த வாரம் போட்டிகள் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் சீசன் 2 வில் போட்டியாளராக கலந்து கொண்ட யாஷிகா மற்றும் மஹத் சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி பொதுவாக ஞாயிற்று கிழமைகளில் தான் நிறைவடையும். அந்த வகையில் இந்த வாரம் 100 நாட்களை நிறைவு செய்ய முடியாததால் பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த வாரம் தான் நிறைவு பெற இருக்கிறது. எனவே, கடந்த சசனை போல இந்த சீசனும் 105 நாட்கள் நடைபெற இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

-விளம்பரம்-
Advertisement