வெளியேறும் ஒரு நாளைக்கு முன்பு தர்ஷனுக்கு நடந்த சதி.! தீயாய் பரவும் செய்தி.!

0
6674
- Advertisement -

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக இறுதி கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி.மேலும்,டைட்டில் வின்னர் யார் ?என்று பல எதிர்பார்ப்புகளுடன் மக்கள் ஆவலாக உள்ளார்கள்.அதிலும் , நேற்று நடந்த எலிமினேஷனில் தர்சன் அவர்கள் வெளியேற்றப்பட்டார்.மேலும், கமல்ஹாசன் அவர்கள் நிகழ்ச்சி தொடக்கத்தில் எதிர்பார்க்காத விஷயமும் நடக்கலாம் என்று அவர் கூறியது போலவே நடந்தது என்று ரசிகர்கள் கூறினார்கள். முடிவாக கமல்ஹாசன் அவர்கள் இது மக்கள் ஓட்டின் மூலம் வந்த முடிவு என்று சொல்லிவிட்டார்.

-விளம்பரம்-

ஆனால், என்ன? நடந்தது என்று ஒன்றும் புரியாத அளவிற்கு மக்கள் உள்ளனர்.பிக்பாஸ் வீட்டை விட்டு கவின் வெளியே சென்றதைத் தொடர்ந்து 5 போட்டியாளர்கள் மட்டும் இருந்தார்கள். மேலும், கவின் சென்றுவிட்டார் யாரும் வெளியே போக மாட்டார்கள் என்று பலரும் நம்பிக்கையில் இருந்தார்கள். ஆனால்,கமல்ஹாசன் அவர்கள் எவிக்ஷன் இல்லை என்று நினைப்பது தவறு என்று கூறினார்.இந்நிலையில் தர்ஷன் தான் இறுதி கட்ட போட்டியாளராக சென்று டைட்டில் வின்னர் ஆக கூடிய வாய்ப்புள்ளது என்று ஆரம்பத்திலிருந்தே மக்களாலும், பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவரும் பேசப்பட்டு வந்த விஷயம்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பாக முகெனை வைத்து மீரா போட்ட திட்டம்.! வைரலாகும் ஆடியோ.!

- Advertisement -

மேலும், மக்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்தது தர்ஷன் தான் இந்த பிக் பாஸ் சீசன் 3ன் வின்னர். ஆனால், மலையே புரட்டிப் போடும் அளவிற்கு கடந்த வாரம் எலிமினேட் இருந்தது. தர்ஷன் வெளியேறியதைத் தொடர்ந்து பல கேள்விகள், பல குமுறல்கள் சமூக வலைதளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தர்ஷன் எந்த காரணத்தினால் எலிமினேட் செய்யப்பட்டார் என்று தற்போது வரை கேள்வியாகவே? இருந்து கொண்டு வருகிறது. ஏனெனில் அவர் ஆரம்பத்திலிருந்தே இப்போது வரை பிக் பாஸ் வீட்டில் நடந்த அனைத்துப் போட்டிகளிலும் மற்றும் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் உடனும் நண்பராகவும் சிறந்து விளங்கினார். ஆனால், ஏன்? அவரை எலிமினேட் செய்தார்கள் தான் புரியவில்லை.

மேலும், அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வரும்போது கூட மேடையில் மக்கள் கூட்டம் கூட்டமாக அவருக்கு கை கொடுத்தும் , கைத்தட்டல் செய்தும் மகிழ்ந்தனர். அதிலும் ஒருசில பேர் கண்ணீர் மழையை பொழிந்தனர். இப்படி அவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கும் போது எப்படி அவரை எலிமினேட் செய்திருப்பார்கள் என்று தர்சன் ரசிகர்கள் பிக்பாஸ் குழுவிடம் கேள்வி கேட்டு வருகிறது. மேலும்,இது பிக்பாஸ் குழுவின் திட்டமாக இருக்கலாம் என்றும் , இதற்குப் பின்னால் ஒரு பெரிய சதி கூட்டம் இருக்குமா என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

இது குறித்து ரசிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியது, விஜய் டிவி பிக் பாஸ் குழு செப்டம்பர் 28ஆம் தேதி தர்ஷன் பைனலுக்கு செல்ல துணி கொண்டு வாருங்கள் என்று தர்ஷன் ஃபேமிலி இடம் கேட்டு இருந்தார்கள். ஆனால்,பிக் பாஸ் குழு திடீரென்று தர்சனை எலிமினேட் செய்தார்கள். என்ன? காரணம் தான் புரியல? அப்ப வின்னர் யார்? என்பதை விஜய் டிவி தான் முடிவு செய்கிறார்களா ! என்று கூறி உள்ளார்.மேலும், யார் வின்னர்? யார் வெளியே போகனும்? எல்லாம் விஜய் டிவி முடிவா என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரசிகர் ஒருவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement