தர்ஷன் – சனம் பிரேக் அப். ஷெரின் தான் காரணமா. சனம் ஷெட்டி பதிவிட்ட சோக போஸ்ட்.

0
76211
tharshan sanam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்த்து. எப்போதும் போல இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான மற்றும் பரிட்சயம் இல்லதா பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். காதல், சண்டை, சர்ச்சை என்று எதற்கும் குறைவில்லாமல் இந்த சீசன் நிறைவடைந்தது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் காதல் கதைகளுக்கு பஞ்சம் இருந்தது இல்லை. ஆனால், இந்த சீசனில் காதல் மற்றும் ரொமான்ஸ் கொஞ்சம் ஓவர் டோஸாகவே சென்றது ஈன்று கூட சொல்லலாம். அபிராமி – கவின், கவின் – சாக்ஷி , முகென் – அபிராமி, கவின் – லாஸ்லியா என்று பல்வேறு காதல் கதைகள் இந்த சீசனில் வழிந்து ஓடியது.

-விளம்பரம்-
View image on Twitter

அதிலும் தர்ஷன் – ஷெரின் காதல் கதை தான் கடைசி வரை புரியாத புதிராக இருந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத சில போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் தர்ஷனும் ஒருவர். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் அதிக இடம் பிடித்துள்ளார்.தர்ஷன் தான் இறுதி கட்ட போட்டியாளராக சென்று பிக் பாஸின் டைட்டில் வின்னர் ஆக கூடிய வாய்ப்புள்ளது என்று ஆரம்பத்திலிருந்தே மக்களாலும், பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவரும் பேசப்பட்டு வந்த விஷயம். ஆனால், என்ன காரணமோ? என்னவோ? தெரியவில்லை. மலையே புரட்டிப் போடும் அளவிற்கு இருந்தது தர்ஷன் எலிமினேட்.தர்சன் வெளியேறியதைத் தொடர்ந்து பல கேள்விகள், பல குமுறல்கள் சமூக வலைதளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன.பிக் பாஸ் மேடையிலேயே பல பேர் கண்ணீர் மல்க அழுதார்கள்.

இதையும் பாருங்க : தாரை தப்பட்டையுடன் தளபதி. இணையத்தில் கசிந்த விஜய் 64 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தர்ஷன் வருவதற்கு முன்பாகவே தர்ஷன் வெளியேறியதற்கு பலரும் பல்வேறு காரணங்களை கூறி வரும் நிலையில் தர்ஷனின் வெளியேற்றத்திற்கு ஷெரின் தான் முக்கிய காரணம் என்று தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசியுள்ள சனம் ஷெட்டி பலபேர் தர்ஷன் தான் வெற்றி பெறுவார் என்று நம்பினார்கள். ஆனால், அவர் எப்படி வெளியேறினார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. மற்றவர்களைவிட அவர் குறைவான ஓட்டுகளை பெற வாய்ப்பே கிடையாது. கவின் ஆதரவாளர்கள் கூட லாஸ்லியாவிற்கு சப்போர்ட் செய்து இருக்கலாம். ஆனால், ஷெரின் எப்படி தர்ஷனை விட அதிக ஓட்டுகள் வாங்கினார் என்பதுதான் தெரியவில்லை. அது எனக்கு மிகவும்மர்மமாக இருக்கிறது வெளியேறினால் கூட தர்ஷனுக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு இருக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.

சனம் ஷெட்டி தான் தர்ஷனை காதலிப்பதாக கூறி வந்தார். ஆனால், தர்ஷன் இதுவரை யாரை காதலிக்கிறார் என்று சொன்னதே இல்லை. இருப்பினும் சமீபத்தில் சனம் ஷெட்டி மற்றும் தர்ஷன் இருவரும் சேரன் நடிப்பில் வெளியாக இருக்கும் ராஜாவுக்கு செக் என்ற படத்தின் ப்ரீ ஷோவிற்கு சென்றிருந்தனர். இந்த நிலையில் சனம் ஷெட்டி மற்றும் தர்ஷன் காதல் முறிந்ததாக சில செய்திகள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகை சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், நான் நிறைய கேட்கவில்லை. ஆனால் தவறான நபரிடம் கேட்டு விட்டேன் என்பது இப்போது தான் புரிகிறது என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், நீங்கள் நிறைய கொடுத்துள்ளீர்கள் என்றால் அதற்காகக் கவலைப்பட வேண்டியதில்லை. வர்கள் போக வேண்டும் என விரும்பினால், கதவைத் திறந்து வையுங்கள். அவர்கள் செல்லட்டும். அது லாபமோ நஷ்டமோ அது காலம் முடிவு செய்யும் என்று பதிவிட்டுள்ளார். சனம் ஷெட்டியின் இந்த பதிவு கண்ட நெட்டிசன்கள், நீங்களும் தர்ஷனும் பிரிந்து விடீர்களா என்று கமன்ட் செய்து வருகின்றனர். மேலும், சனம் ஷெட்டி இதிலும் ஷேரினை தான் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என்றும் கூறி வருகின்றனர்.

Advertisement