உறுதியானதா கமல் படத்தின் வாய்ப்பு ? கமலின் புதிய அலுவலகத்தில் தர்ஷன். வைரலாகும் புகைப்படம்.

0
4818
tharshan-kamal
- Advertisement -

விஜய் தொலைகாட்சியை நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனின் பல்வேறு பரிச்சயமில்லாத போட்டியாளர்கள் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தனர். அதில் மிகவும் முக்கியமானவர் இலங்கையை சேர்ந்த தர்ஷன் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சில நாட்களிலேயே தர்ஷன் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து தர்சன் இறுதிகட்ட போட்டியாளராக செல்வார் என்றும், பிக் பாஸ் சீசன் 3யின் டைட்டில் வின்னர் ஆகக் கூடிய வாய்ப்பு தர்சனுக்கு உள்ளது என்று ஆரம்பத்திலிருந்தே மக்களாலும் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவராலும் கூறப்பட்ட வந்த விஷயம்.

-விளம்பரம்-
tharshan

ஆனால், என்ன நடந்தது என்று இன்னும் வரை யாருக்கும் புரியவில்லை. பெரும் அதிர்ச்சியாக இருந்தது தர்சன் உடைய எலிமினேஷன் தான். இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றம் தற்போது கூட யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேலும், பிக் பாஸ் சீசன் 3 இன் டைட்டில் பட்டத்தை முகென் தட்டி சென்றார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் தர்சன் தன்னுடைய நண்பர்களுடன் ஆட்டம் ,பாட்டம், கொண்டாட்டம் என பயங்கர ஜாலியாக கொண்டாடி வருகிறார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியின் போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி நிகழ்வில் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ஒரு படத்தில் தர்சனை நடிக்க ஒப்பந்தம் செய்வதாக அவர் அறிவித்து இருந்தார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இதையும் பாருங்க : 18 வருட பகையை மறந்த அஜித். வடிவேலுக்கு செய்த உதவி. தல எப்பயும் செம.

- Advertisement -

இந்த நிலையில் சென்னையில் ராஜ்கமல் அலுவலகத்தின் புதிய கட்டிடம் ஒன்று சமீபத்தில் திறக்கப்பட்டது. அந்த புதிய கட்டிடத்தில் இயக்குனர் கே. பாலச்சந்தர் அவர்களின் சிலை ஒன்று வைக்கப்பட்டு உள்ளது. மேலும், அது திறப்பு விழாவில் தர்ஷன் கலந்து கொண்டிருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் 50வது படத்தில் தர்ஷனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக என்று சந்தேகிக்கப்படுகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியின் போது பேசிய கமல், ராஜ் கமலின் மூலம் உருவாகும் ஐம்பதாவது படத்தை மிகப் பிரம்மாண்டமான அளவில் தயாரிக்க உள்ளோம். மேலும், அதில் நான் நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த அளவிற்கு ராஜ் கமல் மூலம் நீங்கள் என்னை வளர்த்து விட்டீர்கள் என்று கூறினார். மேலும், ராஜ்கமல் நிறுவனத்தின் 50 வது படத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவலும் வெளியாகி இருக்கிறது. எனவே, இந்த படத்தில் தர்ஷன் கமிட் ஆனால், விக்ரமுடன் நடிக்கும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement