18 வருட பகையை மறந்த அஜித். வடிவேலுக்கு செய்த உதவி. தல எப்பயும் செம.

0
262669
ajith-vadivelu
- Advertisement -

சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக கலக்கி கொண்டு இருக்கிறார் தல அஜித். மேலும்,அஜித் அவர்களின் புதிய படமான “வலிமை” படம் குறித்து பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும்,இந்த வருடம் தல அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் அள்ளித் தந்தது. மேலும், இந்த இரண்டு படங்களுமே ப்ளாக் பஸ்டர் படங்களாக அமைந்தது என்று கூட சொல்லலாம். இந்நிலையில் நேர்கொண்டபார்வை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் இணைந்து தல அஜித்தை வைத்து மற்றொரு படம் உருவாகி வருகிற தகவலும் அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எனவும் தெரியவந்துள்ளது.

-விளம்பரம்-
Image result for ajith vadivelu"

அதுமட்டுமல்லாமல் நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படுத்திலும் பணியாற்றுகிறார்கள் எனவும் அறிவித்தார்கள். மேலும், இந்த புதிய படத்திற்கு அதாவது தல 60 படத்திற்கு ‘வலிமை’ என்ற பெயரையை வைத்து இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள் படக்குழுவினர். மேலும், இந்த வலிமை படத்திற்கான பூஜைகளும் கடந்த அக்டோபர் மாதமே போடப்பட்டது. அதுமட்டுமில்லாமல் தல அஜித் அவர்கள் வலிமை படத்திற்காக கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், இந்த மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் எல்லாம் பயங்கர குஷியிலும், உற்சாகத்திலும் உள்ளனர்.

இதையும் பாருங்க : நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மிதந்தபடி போஸ். மஞ்சிமா, என்னமா இதெல்லாம்.

- Advertisement -

‘விஸ்வாசம், வீரம், விவேகம், வேதாளம், நேர்கொண்ட பார்வை’ போன்ற பல படங்களில் பெப்பர் சால்ட் ஹேர் ஸ்டலில் நடித்த நம்ம தல அஜித் அவர்கள் இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. மேலும்,வலிமை படம் அதிரடி சண்டை படமாக தயாராகிறது. அதோடு மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார் பந்தய காட்சிகளும் இந்த படத்தில் இடம் பெறும் என்ற ஒரு அற்புதமான தகவலையும் தெரிவித்துள்ளார்கள். மேலும், இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். ஹீரோயினி குறித்த தகவல் தான் இன்னும் அதிகார பூர்வமாக தெரியவில்லை. ஆனால்,இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Image result for valimai"

இந்நிலையில் அஜித் அவர்களின் வலிமை படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்கள் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்து உள்ளது. நகைச்சுவை என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது வடிவேல். அதோடு நடிகர் வடிவேல் தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு தன்னுடைய அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்பு திறமையால் ‘வைகைப் புயல்’ என்ற பட்டமும் பெற்றார். அதோடு நடிகர் வடிவேலு அவர்கள் ஏற்கனவே 2002 ஆம் ஆண்டு இயக்குனர் எழில் இயக்கிய ‘ராஜா’ படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், அந்த படத்திலேயே அஜீத்துக்கும், வடிவேலுக்கும் சில பிரச்சினைகள் ஏற்பட்டு அதன் பிறகு 18 ஆண்டுகளாக வடிவேலுடன் இணைந்து நடிப்பதை தவிர்த்துவிட்டார். மேலும், கடந்த 18 வருடங்களாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூட இல்லை. மேலும், தல அஜித்தின் வலிமை படத்தில் வடிவேலு இணைந்து நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது எனினும் படக்குழுவினர் வடிவேல் இந்த படத்தில் இணைய உள்ளார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement