அப்படி நடக்கவே இல்லை.! தர்ஷன் பெயரை கெடுக்கிறார் வனிதா.! கடுப்பான தர்ஷன் காதலி.!

0
3596
vanitha
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் வெற்றியாளர்கள் யார் என்று முடிவாக இருந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார் கவின். இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் வனிதா, இன்று நாள் முழுக்க கவின் பற்றியும் மற்ற போட்டியாளர்கள் பற்றியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தர்ஷன் காதலி சனம் ஷெட்டி குறித்தும் பொய்யா தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார் வனிதா.

-விளம்பரம்-
https://twitter.com/vanithavijayku1/status/1177558103862038534

வனிதா பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை இவருக்கும் தர்ஷன் இருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு இருந்தது. அதே போல பிக்பாஸ் வீட்டில் தர்ஷன் மற்றும் ஷெரின் இருவரும் கொஞ்சம் நெருக்கமாக பழகி வந்தன.ர் அப்போது அவர்கள் உறவை கொச்சைபடுத்தும் வகையில் தர்ஷன் மற்றும் ஷெரின் கள்ளத் தொடர்பு வைத்திருப்பது போல தெரிகிறது என்று வனிதா மிகவும் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் தர்ஷன், ஷெரின் ஆகியோர் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் சனம் ஷெட்டி குறித்தும் தர்ஷன் குறித்தும் பதிவிட்ட வனிதா , தர்ஷன் ஷெரினிடம் நடந்து கொண்ட விதத்தை கண்டு அவரது காதலி சனம் வெட்டி மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி மருத்துவரை சந்திக்கும் நிலை ஏற்பட்டதாகவும், அது தெரிந்தும் கூட தர்ஷன் அதனை பொருட்படுத்தவில்லை என்றும் கூறியிருந்தார். எனவே, இந்த விஷயத்தை ரசிகர் ஒருவர் சனம் ஷெட்டி இடம் வாட்ஸ்அப் மூலம் உரையாடிய ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

https://twitter.com/vanithavijayku1/status/1177547594475565058

அந்த ஸ்கிரீன் ஷாட்டில் அந்த ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ள சனம் ஷெட்டி அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை என்றும் வனிதா பொய்யான தகவலை பேசி வருகிறார் என்றும் நான் ட்விட்டரில் கூட இல்லை அப்படியிருக்க வனிதா எதற்கு இவ்வாறு பொய்களைக் கூறி வருகிறார். வனிதா என்னுடைய பெயரை பயன்படுத்தி தர்ஷனை டார்கெட் செய்கிறார் இது என்னுடைய தவறு இல்லை அவருடைய தவறு என்று பதிவிட்டுள்ளார் சனம் ஷெட்டி. இதன் மூலம் தர்ஷினியின் பெயரை கெடுக்க வனிதா இது போன்று செய்து வருகிறார் என்று தர்ஷனின் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement