தளபதி விஜய் குடும்பத்தினரை சந்தித்த தர்ஷன்.. குவியும் லைக்ஸ்..என்னவா இருக்கும்..

0
11674
tharshan-met-shobana
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றவது சீசன் நடந்த வாரம் நிறைவடைந்தது. இந்த சீசனில் ரசிங்கர்களுக்கு பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் தர்ஷனனும் ஒருவர். தமிழகத்தில் அறிமுகம் இல்லாத புதியமுகம். தர்சன் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். பிரபல சாஃப்ட் வேர் (ஐடி) நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து இருந்தவர். அவருக்கு சினிமா மீது கொண்ட ஆர்வத்தினால் மாடலிங் செய்ய ஆரம்பித்தார். அது மட்டுமில்லாமல் இலங்கையிலேயே மாடலாக இருந்தார். மேலும் பல மாடலிங் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

-விளம்பரம்-
View this post on Instagram

With shoba ma’am. #thalapathy

A post shared by Tharshan Thiyagarajah (@tharshan_shant) on

தர்சன் வாழ்க்கையில் பல துன்பங்களுக்கு பிறகு தற்போது தான் முன்னணிக்கு வந்தவர். ஆனால், சினிமாவிற்கு எந்த ஒரு அறிமுகம் இல்லாதவர். ஏழ்மையான சாதாரண குடும்பத்தில் இருந்து சினிமாத்துறையில் ஹீரோவாக ஆகும் ஆசையில் புறப்பட்டவர். பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ள தர்ஷன் தற்போது பிக்பாஸ் வாய்ப்பு மூலம் தமிழக மக்கள் பலரின் மனதில் இடம் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல நடிகர்கள், இசையமைப்பாளர்கள் என அனைவரையும் சந்தித்து வாய்ப்பும் கேட்டுள்ளார். இதுவரை குறைந்தபட்சம் நூறு இடங்களிலாவது நடிப்புக்கான தேர்வில் கலந்து கொண்டுள்ளார்.

இதையும் பாருங்க : சும்மா பத்தினினு சொல்ல கூடாது.. மதுமிதாவின் ஆடை கேள்விக்கு பதில் சொன்ன அபிராமி..

- Advertisement -

ஆனால், எதிலுமே சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் அதிக இடம் பிடித்துள்ளார். தர்ஷன் தான் இறுதி கட்ட போட்டியாளராக சென்று பிக் பாஸின் டைட்டில் வின்னர் ஆக கூடிய வாய்ப்புள்ளது என்று ஆரம்பத்திலிருந்தே மக்களாலும், பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவரும் பேசப்பட்டு வந்த விஷயம். ஆனால், என்ன காரணமோ? என்னவோ? தெரியவில்லை. மலையே புரட்டிப் போடும் அளவிற்கு இறுதி போட்டிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக எலிமினேட் ஆகி இருந்தார் இருந்தது. தர்ஷன் வெளியேறியதைத் தொடர்ந்து பல கேள்விகள், பல குமுறல்கள் சமூக வலைதளங்களில் வந்தன.

தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் இவருக்கு இருக்கும் ஆதரவை கண்டு மிகவும் நெகிழ்ச்சி அடைந்தார். இந்த நிலையில் தர்ஷன் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டாரான இளைய தளபதி விஜய்யின் அம்மா ஷோபானாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்ஸ்கள் குவித்து வருகிறது. அதே போல நேற்று தான் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் ட்ரைலரும் வெளியாகி இருந்தது. இதனால் தர்ஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிகில் படத்தின் ட்ரைலரை பகிர்ந்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தர்ஷன் இந்தியன் 2 படத்தில் நடிக்க போவதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், அது குறித்து இன்னமும் உறுதிப்படுத்தபடவில்லை. இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியின் போது தர்சனுக்கு கமல் அவர்கள், தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பேட்ஜை அளித்து. தர்ஷனை ஒரு நல்ல பாதையில் அழைத்து செல்வது எனது கடமை என்று மேடையில் அறிவித்தார். எனவே, தர்ஷன் விரைவில் கமல் படத்தில் நடிப்பார் என்று தர்ஷன் ரசிகர்கள் மிகந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.


Advertisement