சும்மா பத்தினினு சொல்ல கூடாது.. மதுமிதாவின் ஆடை கேள்விக்கு பதில் சொன்ன அபிராமி..

0
14347
abhi-madhu

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு போட்டியாளர்கள் பல்வேறு விதமான சர்ச்சைகளை சந்தித்து வந்தார்கள். அந்த வகையில் ஆடை விவகாரத்தில் சர்ச்சையை சந்தித்து வந்தவர்தான் நடிகை அபிராமி. அபிராமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது இவருக்கும் மதுமிதாவிற்கும் பாட்டில் குழந்தை விவகாரத்தில் சண்டை முற்றியது. அதேபோல தமிழ் கலாச்சாரம் என்ற வார்த்தையை மதுமிதா பயன்படுத்தியதால் அபிராமிமதுமிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், பிக் மதுமிதா பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் பேட்டி ஒன்றில் பேசிய போது, அபிராமி ஆண்களுக்கு முன்னால் உள்ளாடை கூட அணியாமல் சுற்றி வந்தார் என்று கூறியிருந்தார். அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீராமிதுன், அபிராமி மற்றும் சாக்ஷி இருவரும் ஜோவுடன் இணைந்து கொண்டு தனக்கு எதிராக பல்வேறு சதிகளை செய்து வருவதாகவு,ம் தனது தொலைபேசி எண்ணை அனைத்து குழுவிலும் பகிர்ந்து உள்ளதாகவும். இதனால் தனக்கு பல்வேறு விதமான தொல்லைகள் வருவதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அபிராமி, மதுமிதா குறித்தும் மீரா குறித்தும் பேசியுள்ளார்.

Image result for abhirami madhumitha

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அபிராமியிடம் மீராமிதுன், அபிராமி குறித்து ட்விட்டரில் பதிவு செய்ததை காண்பித்தனர். அதனை கண்ட அபிராமி விழுந்து விழுந்து சிரித்தார். மேலும், என்னை விட சாக்க்ஷி தான் இதை விட அதிகமாக சிரிப்பாள் என்று நினைக்கிறேன். பிரயோஜனமாக இருக்கும் விஷயங்களுக்கு தான் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒன்றும் பிரயோஜனம் இல்லாத விஷயத்திற்கு நான் ஏன் ரியாக்சன் கொடுக்க வேண்டும் என்று மீராமிதுன் ஒரு பொருட்டே இல்லாதது போன்று பதிலளித்தார். அதன் பின்னர் மதுமிதா ஆடை விவகாரத்தில் அபிராமி குறித்து சொன்ன சர்ச்சை கருத்து குறித்து கேட்கப்பட்டது.

இதையும் பாருங்க : பிக் பாஸிற்கு பின் முதன் முறையாக மதுவை சந்தித்த சேரன்.. நன்றி தெரிவித்த மதுவின் கணவர்..

- Advertisement -

அதற்கு பதிலளித்த அபிராமி ஆடை விவகாரத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே மதுமிதா பேசியிருக்கிறார். சிலர் எப்போதும் மாற மாட்டார்கள்அவர்களை நாம் எவ்வளவுதான் நாம் நல்லபடியாக பார்த்தாலும் அவர்கள் மாற மாட்டார்கள். என்னை பொருத்தவரை நான் பார்த்தவரை மதுமிதா தனக்கு இதுதான் வேண்டும் அதுதான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் ஒரு சிறு குழந்தை போலத்தான் இருந்துவந்தார். அப்படிப்பட்ட மதுமிதாவை தான் நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இந்த ஆடை விவகாரம் அடிக்கடி எனக்கு சங்கடமான விஷயமாக தொடர்ந்து வருகிறது. இதைப் பார்க்கும்போது மற்றவர்களும் மனநிலை மாறவேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். ஆனால், சில பேர் மாறுவது மிகவும் கடினமான விஷயம் தான் ஆனால், அவர்கள் மாறினால் அது அவர்களின் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதேபோல எனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நான் உள்ளாடை அணியாமல் இருந்ததை பலபேர் கமெண்ட் செய்தார்கள். அவர்களும் தமிழர்கள்தான் தமிழ் தமிழ் என்று சொல்லும் நபர்கள் தான் இதுபோன்ற கமெண்ட்களை போட்டு வந்தார்கள். ஆனால், அதனை ஒரு குப்பையாக நினைத்து நான் தூக்கி எறிந்து விட்டேன்.

Image result for abhirami madhumitha

நான் மற்றவர்களுக்கு சொல்ல வேண்டியதை நமது நடத்தையில் தான் காட்ட வேண்டுமே தவிர அனைவரிடமும் போய் நாம் கூற வேண்டிய அவசியமில்லை. அவர்கள் அடிக்கடி சொல்லும் உன்னதமான வார்த்தைகளில் பத்தினி என்று சொல்லும் அடங்கும். ஆனால், பத்தினி என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால், என்னை அசிங்கப் படுத்தும் கமெண்ட்கள் அதிகம் வருகிறது .இது போன்ற விஷயங்கள் மொத்த நாட்டிற்கும் தீங்கானது. ஒரு பெண்ணை அவர் அணியும் ஆடையை காரணமாக காட்டி கற்பழித்து விட்டால் என்று கூறினால் அதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா என்று கூறியுள்ளார் அபிராமி.

-விளம்பரம்-
Advertisement