முழு ஜூலியாக மாறி வரும் அனிதா, கமல் முன் ஒரு பேச்சு, பஞ்சாயத்தில் ஒரு பேச்சு – குறும்படத்தால் எல்லாம் போச்சு.

0
326
anitha
- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நான்காம் வாரம் முடிந்து வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். தமிழில் புது வித்தியாசமான கான்செப்டில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் அல்டிமேட். இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ottயில் ஒளிபரப்பானது. இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளையாடி வருகிறார்கள். பின் நிகழ்ச்சியில் இருந்து முதலில் சுரேஷ் சக்ரவர்த்தி எலிமினேட் ஆகி இருக்கிறார். அதனை தொடர்ந்து இரண்டாம் வாரத்திற்கான எவிக்ஷனில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் சுஜா வருணி மக்களின் இருந்தார்.

- Advertisement -

நிகழ்ச்சியில் கமல் வெளியேற காரணம்:

இதனை தொடர்ந்து மூன்றாவது வாரம் அபிநய் மற்றும் ஷாரிக் வெளியேறி இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் மூன்றாம் வாரம் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து கமலஹாசன் பட சூட்டிங் நேரம் ஒதுக்க முடியாத காரணத்தினால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனால் ரசிகர்களும் போட்டியாளர்களும் பெரும் அப்சட் அடைந்து இருந்தார்கள். அதோடு கமல் வெளியேறியதை தொடர்ந்து வனிதாவும், தான் நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று கூறி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

நிகழ்ச்சியில் எலிமினேஷன்:

கடந்த வாரம் தான் BB அல்டிமேட்டின் தொகுப்பாளராக சிம்பு களமிறங்கி இருக்கிறார். அதேபோல் இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக சதீஸ் நுழைந்து இருக்கிறார். மேலும், கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் கேப்டன் தாமரை மற்றும் வார ட்ரெண்டிங் பிளேயர் பாலாஜி முருகதாஸை தவிர மீதமுள்ள 8 பெரும் நாமினேட் ஆகி இருக்கின்றனர். ஆனால், கடந்த வாரம் வனிதா தாமாகவே வெளியேறிவிட்டதால் எலிமினேஷன் இல்லை என்று கூறப்பட்டது. அதனால் குறைந்த வாக்குகளை வாங்கிய தாடி பாலாஜி எலிமினேஷனில் இருந்து தப்பித்துள்ளார். மேலும், இந்த வார டிரெண்டிங் பிளேயர் யாரும் இல்லை.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் பஞ்சாயத்து டாஸ்க்:

இந்த வார கேப்டன் பாலாஜி முருகதாஸ் தவிர இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் தாடி பாலாஜி, வாரம் அனிதா, ஜூலி, அபிராமி, சினேகன், தாமரை ஆவார். இந்த நிலையில் இந்த வாரம் நிகழ்ச்சியில் பஞ்சாயத்து டாஸ்க் நடந்து கொண்டிருக்கின்றது. வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவரும் இரு அணிகளாகப் பிரிந்து விளையாடிக் கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் அனிதா பேசியிருக்கும் விஷயம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. அது என்னவென்றால், நிகழ்ச்சியில் திருடன் பொலீஸ் டாஸ்க் நடந்துகொண்டிருந்தபோது அனிதா, பாலா மீது புகார் கொடுத்திருந்தார்.

பாலா குறித்து அனிதா பேசியது:

அதில் அவர், பாலாவை பற்றி புகழ்ந்து பேசும் போது நன்றாக இருக்கிறார். ஆனால், மற்றவர்களை பற்றி பேசும்போது கோபப்படுகிறார். இது அவருடைய பொறாமையின் வெளிப்பாடு என்று அனிதா எழுதி இருந்ததாக சுருதி படித்து இருந்தார். ஆனால், இதை பற்றி தற்போது பஞ்சாயத் டாஸ்கில் பேசும்போது அனிதா, நான் அப்படி எல்லாம் எழுத வில்லை. கீழே பொறாமை என்ற வார்த்தை எழுதி இருந்தேன். அதோடு வைத்து சேர்த்து படித்திருக்கலாம். நான் அப்படி எழுதவில்லை என்று அனிதா சமாளிக்கிறார். இப்படி இவர் பேசியிருந்தோம் வீடியோவை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் before, after என்று பதிவிட்டு அன்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு என்று விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement