யானை, சோளம், பாம்பு – பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்துகொள்ளும் முதல் போட்டியாளர் இவர் தானாம். யார் புரியுதா ?

0
412
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்திருந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிகப்பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இது தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்தியாவில் முதன் முதலில் இந்தி மொழியில் தான் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தான் பிற மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழில் ஐந்து வருடங்களாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

இந்த ஐந்து வருடங்களாகவும் கமலஹாசன் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வருடமும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது. ஆரம்பத்திலேயே நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களை களமிறக்கி இருந்தார்கள். பல போட்டிகள், சவால்கள் உடன் நிகழ்ச்சி நடைபெற்று இருந்தது.

- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் :

மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே கடந்த சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்தது. இதில் முதல் இடத்தை ராஜுவும் இரண்டாம் இடத்தை பிரியங்காவும் பிடித்தனர். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து இருப்பதால் பிக் பாஸ் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு புது வகையான பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்க இருக்கிறது.

போட்டியாளர்கள் யார் யார் :

அதாவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு இந்த பிக் பாஸ் வேறு. அதாவது பிக் பாஸ் வீட்டை 24 மணி நேரமும் பார்க்க முடியும். கடந்த ஆண்டு தான் இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. இந்நிலையில் தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் தொடங்க இருக்கிறார்கள். மேலும், தமிழில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் தமிழ் பிக் பாஸில் 1 முதல் 5 சீசன் வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

-விளம்பரம்-

இன்னும் 7 நாட்களில் BB Ultimate :

ஆனால், ஏற்கனவே பிக் பாஸ்ஸில் 5 சீசனில் பட்டத்தை வென்றவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு இல்லை. அதே போல இந்த நிகழ்ச்சியையும் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் அல்டிமேட் என்று பெயர் வைத்து உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் சில தினங்களுக்கு முன் நடந்த கிராண்ட் பினாலேவில் இந்நிகழ்ச்சி குறித்து கமலஹாசன் கூறியிருந்தார். இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 30 ஆம் தேதி 6. 30 மணிக்கு துவங்க இருக்கிறது.

யார் அந்த முதல் போட்டியாளர் :

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பெயர்கள் சமூக வலைதளத்தில் அடிபட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் முதல் போட்டியாளர் யார் என்பதை ஒரு ப்ரோமோ மூலம் கூறியுள்ளார்கள். அதில் யாண பசி சோல பொரி, பாம்பு, துப்பாக்கி போன்றவற்றை Clueவாக கூறியுள்ளனர். இதை வைத்து பார்க்கும் போது இது சினேகன் என்பது உறுதியாகி இருக்கிறது. ஏனெனில் ‘காட்டுப்பயலே’ பாடலை எழுதியது சினேகன் தான். அதே போல Snake + Gun = சினேகன். இப்போ புரியதா.

Advertisement