இரண்டாம் நாளே நடந்த நாமிநேஷன் – முதல் வாரத்திலேயே நாமினேட் ஆன 8 போட்டியாளர்கள். யார் யார் பாருங்க.

0
564
BiggBoss
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக துவங்கியது. இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிகப்பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். இது தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. முதலில் இந்த நிகழ்ச்சியை ஹந்தியில் தான் ஒளிபரப்பினார்கள். அதற்கு பிறகு தான் பிற மொழியில் ஒளிபரப்பானது. மேலும், தமிழில் ஐந்து வருடங்களாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக நிறைவடைந்தது. இதில் முதல் இடத்தை ராஜுவும், இரண்டாம் இடத்தை பிரியங்கா பிடித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து ரசிகர்கள் சோகத்தில் இருந்த சமயத்தில் தான் ஒரு புது வித பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி அறிமுகப்படுத்தி உள்ளது. அது தான் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு. இந்த பிக் பாஸ் வேறு.

- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

மேலும், இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்ய இருக்கின்றனர். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று முதல் நாள் என்பதால் மட்டும் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள்:

இதில் முதல் நாளே வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, அபிராமி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்துகொண்டனர். ஆனால், பிக் பாஸ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓவியா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. மேலும், கடந்த 2 சீசன்களை போல போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் போட்டியாளர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு தனிமைப்படத்தப்பட்ட பின்னரே பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

-விளம்பரம்-

நாமினேட் செய்தவர்களின் பட்டியல்:

மேலும், இதுவரையில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பல விஷயங்களை எடிட் செய்து ஒரு முக்கியமான செயல்களை மட்டும் காட்டி இருந்தார்கள். இதனால் இந்த வீட்டில் என்ன நடக்கிறது? என்பதை அனைவரும் புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது. ஆனால், தற்போது ஒளிபரப்பாகி வரும் அல்டிமேட் நிகழ்ச்சியில் உள்ளே நடப்பதை அப்படியே ரசிகர்கள் பார்த்துக்கொள்ள முடியும். இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் நாளே நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதில் போட்டியாளர்கள் நாமினேட் செய்தவர்களின் பட்டியல்,

அபிராமி – அனிதா, நிரூப்

ஜூலி – சுரேஷ், சுருதி

பாலாஜி – சினேகன், வனிதா

சுரேஷ் – ஜூலி, அபிநய்

வனிதா – அனிதா, சினேகன்

சுஜா – அபிநய், சுருதி

அனிதா – வனிதா, ஜூலி

தாடி பாலாஜி – சுரேஷ், தாமரை செல்வி

சுருதி – வனிதா ஜூலி

அபினய் – சுரேஷ், வனிதா

தாமரை – வனிதா, ஜூலி

ஷாரிக் – சுரேஷ், வனிதா.

மேலும், இந்த வார நாமினேஷனில் வனிதா, சுரேஷ், ஜூலி, அபிநய், அனிதா, சினேகன், சுருதி, நிரூப்
பெயர் இடம் பெற்று இருக்கிறது. இதில் முதலில் யார் வெளியே போக போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement