பிக் பாஸ் அல்டிமேட் பட்டத்தை வென்றது யார் தெரியுமா ? இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்த போட்டியாளர்கள் இவர்கள் தான்.

0
818
Biggboss
- Advertisement -

ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இன்றுடன் நிரைடைகிறது. 16 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 12 பேர் வெளியேற்றப்பட்டு 4 பேர் மட்டும் இறுதி போட்டியில் இருந்தனர். கடந்த வாரம் இறுதி நாமினேஷன் என்பதால் அனைவரும் நாமினேட் ஆகி இருந்தார்கள். இதில் பல தனியார் சமூக வலைதள பக்கத்தில் நடைபெற்று வந்த வாக்கெடுப்புகளில் அபிராமிக்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகி இருந்தது. இதனால் அவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அனைவரும் இறுதி வாரத்திற்கு தகுதி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் அபிராமி திடீரென்று வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

இதனால் பாலாஜி, ஜூலி, ரம்யா பாண்டியன், நிரூப், தாமரை ஆகிய 5 பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுஇருந்தனர். இப்படி ஒரு நிலையில் ஜூலியும் திடீரென்று வெளியேற்றப்பட்டார். இதன் மூலம் பாலாஜி, நிரூப், தாமரை, ரம்யா ஆகிய 4 பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர். இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார் என்று மிகுந்து எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் பாலாஜி முருகதாஸ் பட்டத்தை வென்று இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இதையும் பாருங்க : அவனுக்கெல்லாம் ஒரு வரி கூட கிடையாது – பிக் பாஸ் அல்டிமேட் இறுதி போட்டி நடைபெறும் வேளையில் அனிதா சம்பத் குறித்து அவரது கணவர் போட்ட பதிவு.

- Advertisement -

35 லட்ச ரூபாய் பரிசு தொகை :

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பிடித்த பாலா இந்த சீசனில் முதல் இடத்தை பிடித்து இருகிறார். அதே போல இந்த சீசனில் 50 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் பணப்பெட்டி டாஸ்க்கில் 15 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு சுருதி வெளியேறி இருந்தார். அந்த 15 லட்சம் பணம் வெற்றியாளரின் பணத்தில் இருந்து கழிக்கப்பட்டு 35 லட்ச பரிசை வென்று இருக்கிறார் பாலா.

பட்டத்தை வென்ற பாலாஜி :

மேலும், பாலாஜி தான் இந்த சீசனில் வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் பல வாரங்களுக்கு முன்பே கணித்துவிட்டனர். ஆனால், இரண்டாம் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வந்தது. மேலும், ஜூலி முதல் இடத்தை பிடிக்கவில்லை என்றாலும் நிச்சயம் இரண்டாம் இடத்தையாவது பிடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென்று வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

இரண்டாம் இடத்தை பிடித்த நிரூப் :

ஜூலியின் வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் இரண்டாம் இடத்தை நிரூப்பும் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை ரம்யா மற்றும் தாமரையும் பிடித்துள்ளனர். நிரூப் கடந்த சீசனில் பைனலுக்கு வர மற்ற போட்டியாளர்களிடம் சமரசம் செய்து இருந்தார். மேலும், இந்த சீசனில் எப்படியாவது டைட்டிலை வெற்றி பெற வேண்டும் என்று நினைத்துகொண்டு இருந்தார் நிரூப்.

தாமரை ஆசை நிறைவேறியது :

அதே போல கடந்த சீசனிலும் சரி, இந்த சீசனிலும் சரி தாமரை பணப்பெட்டியை எடுத்துசெல்லவே இல்லை. கடந்த சீசனில் இறுதி போட்டிக்கு நிச்சயம் வந்துவிடுவோம் என்று நம்பினார் தாமரை ஆனால், இறுதி வாரத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அவர் வெளியேற்றப்பட்டார். அதே போல இந்த சீசனில் கூட இறுதி போட்டிக்கு சென்றே ஆக வேண்டும் என்று பணப்பெட்டியை எடுக்காமல் இருந்தார் தாமரை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement