‘எங்களுக்காக வருத்தப்படாதீங்க’ – விவகாரத்தை அறிவித்த பிக் பாஸ் 2 பிரபலம். அதற்கு அவர் சொன்ன காரணம்.

0
530
- Advertisement -

பிக்பாஸ் பிரபலம் வைஷ்ணவி திடீரென விவாகரத்தை அறிவித்திருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தவர் ஆர்.ஜே. வைஷ்ணவி. ஆனால், இவர் இதற்கு முன்பு ரேடியோ ஜாக்கியாக இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் சாவி சா.விஸ்வநாதனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லாமல் சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் வைஷ்ணவி ஒரு சிறு காட்சியில் வந்து இருந்தார். அது வைஷ்ணவி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் கலை நிகழ்ச்சி நடைபெற்றதாம். அப்போது அவருக்கே தெரியாமல் வல்லவன் படத்திற்காக எடுத்த காட்சி என்று வைஷ்ணவி கூறி இருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : சங்கர் சார், உங்க பொண்ண பத்தி பேசுனது தப்புதான், என்ன மன்னிச்சுடுங்க – அந்தர் பல்டி அடித்த கூல் சுரேஷ்.

நண்பனுடன் காதல் :

இதனிடையே இவர் தனது நீண்டகால நண்பன் அஞ்சன் என்பவரை காதலித்து வந்தார். பின் அவரையே திருமணம் செய்து கொண்டார். அஞ்சன் விமான பைலட் ஆக பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு பிறகு வைஷ்ணவி தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களை எல்லாம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

வைஷ்ணவி திருமணம் :

வைஷ்ணவி எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தன் கணவருடன் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் என எதையாவது ஒன்று சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார். இதனால் இவரை பல்லாயிரம் கணக்கான ரசிகர்கள் ஃபாலோ செய்கிறார்கள். சமீபத்தில்கூட வைஷ்ணவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வீட்டின் அருகில் மர்ம நபர் ஒருவர் தன்னைப் பின் தொடர்ந்து வருவதாக சோஷியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்.

வைஷ்ணவி சொன்ன காரணம் :

இது தொடர்பாக இவர் போலீசில் புகாரும் அளித்தும் இருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் வைஷ்ணவி தன் கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர்கள் இருவருமே திருமணம் ஆகி பல வருடங்களாக ஒன்றாக தான் வாழ்ந்து வந்தார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் வைஷ்ணவி திடீரென பிரிவதாக சோசியல் மீடியாவில் பதிவு போட்டிருக்கிறார்.

எங்களுக்காக வருத்தப்படாதீர்கள்

அதில் அவர், நாங்கள் நண்பர்களாக தொடர்வோம். மோசமான விஷயம் எதுவும் நடைபெறவில்லை. ஆனால், நாங்கள் நண்பர்களாக மட்டும் இருப்பது தான் சரியாக இருக்கும் என இருவருமே முடிவெடுத்திருக்கிறோம். எங்களுக்காக வருத்தப்படாதீர்கள். நாங்கள் பிரிவதற்காக வருத்தப்படவில்லை. துரதிஸ்டவசமாக சூழ்நிலை எங்களுக்கு சரியாக இல்லை. அவருக்கு என் மனதில் எப்போதும் ஒரு இடம் இருக்கும் என்று வைஷ்ணவி கூறி இருக்கிறார்.

Advertisement