பெண்கள் அணியும் தாலி குறித்து மோசமாக கமன்ட் அடித்த பிக் பாஸ் வைஷ்ணவி.!

0
977
vaishnavi
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தமிழில் விரைவில் துவங்க இருக்கிறது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் இருந்து வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா தத்தாவிற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் மிகவும் வெறுக்கப்பட்டார். பிக் பாஸ் வைஷ்ணவி தான் வெளியே வந்த பின்னரும் இவர் சர்ச்சையான பல விடயங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

-விளம்பரம்-

பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாக ஆர் ஜேவாக இருந்து வந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. வைஷ்ணவி, அஞ்சான் ரவி என்பவரை நீண்ட நாட்களாக காதலித்துவந்தார் . அஞ்சான், விமான ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்கள் இருவரும் 3 வருடங்களாக காதலித்து வந்தனர்.

இதையும் பாருங்க : கரகாட்டகாரன் 2 படத்தில் நடிக்க மறுத்த ராமராஜன்.! அவர் சொன்ன காரணம் இது தான்.! 

- Advertisement -

இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக லிவிங் டுகேதார் முறையில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் வைஷ்ணவி தனது நீண்ட வருட காதலரான அஞ்சானை திடீரென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வைஷ்ணவி. மேலும், இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.

திருமணம் முடிந்தவுடன் வைஷ்ணவி தனது சமூக வலைத்தள பக்கத்தில் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து இருந்தார். அதில் ஒரு பதிவில் நாங்களமங்களம் முழுங்க தாலி கட்டிக் கொள்ளவில்லை, மோதிரங்களை பரிமாறிக் கொள்ளவில்லை. நாங்கள் தங்கமோ, வைரமோ வேறு எந்த நகைகளையோ வாங்கவில்லை. நான் கவரிங் நகைகளை தான் அணிந்திருந்தேன் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

இந்தப் பதிவை கண்ட விட்டர் வாசி ஒருவர் தாலி என்பது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் நமது முன்னோர்கள் அதனை உடல் நலத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் உருவாக்கிய விஷயம் அது அது ஒன்றும் பந்தாவுக்காக காட்டிக்கொள்ளும் ஒரு ஆபரணம் கிடையாது’ என்று பதிவிட்டிருந்தார். தாலி குறித்து இப்படி மோசமாக பேசியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் வைஷ்ணவி பல விமர்சங்களை பெற்று வருகிறார்.

Advertisement