Home பொழுதுபோக்கு சமீபத்திய

இரவில் பின் தொடர்ந்த இளைஞர் செய்த செயலால் பயந்து போன பிக் பாஸ் வைஷ்ணவி – வீடியோ எடுத்து போலீசில் புகார்

0
305
vaishnavi
-விளம்பரம்-

இளைஞர் ஒருவர் தன்னைப் பின் தொடர்ந்து தொந்தரவு செய்வதாக வீடியோ ஆதாரங்களுடன் சமூக வலைத்தளத்தில் புகார் அளித்து இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தவர் ஆர்.ஜே. வைஷ்ணவி. ஆனால், இவர் இதற்கு முன்பு ரேடியோ ஜாக்கியாக இருந்தார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் வைஷ்ணவி ஒரு சிறு காட்சியில் வந்து இருந்தார். அது வைஷ்ணவி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் கலை நிகழ்ச்சி நடைபெற்றதாம். அப்போது அவருக்கே தெரியாமல் வல்லவன் படத்திற்காக எடுத்த காட்சி என்று வைஷ்ணவி கூறி இருந்தார். பின் இவர் திருமணமாகி தன் கணவருடன் வாழ்ந்து வருகிறார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தன் கணவருடன் வெளிநாட்டுக்கு சென்று எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் என எதையாவது ஒன்று சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார்.

இதையும் பாருங்க : சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் டி.ராஜேந்தர் – நேரில் சென்று பார்த்த கமல் ( TR எப்படி இருக்கார் பாருங்க )

வைஷ்ணவி பதிவிட்ட வீடியோ:

இதனால் இவரை பல்லாயிரம் கணக்கான ரசிகர்கள் ஃபாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் தற்போது வைஷ்ணவி ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதாவது, வைஷ்ணவி தன்னுடைய வீட்டின் அருகில் தான் வளர்க்கும் நாயுடன் வாக்கிங் சென்று இருக்கிறார். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து இருக்கிறார். ஆனால், சாதாரணமாக போன் பேசுவது போல் நடித்துக்கொண்டே 30 நிமிடங்கள் அவருடைய வீட்டின் அருகில் சுற்றி இருக்கிறார் வைஷ்ணவி.

வைஷ்ணவி அளித்த புகார்:

-விளம்பரம்-

ஏற்கனவே அந்த நபர் இவரை வாகனத்தில் பின்தொடர்ந்து இருப்பதை கவனித்த வைஷ்ணவி வீட்டிற்கு செல்லாமல் 30 நிமிடங்களுக்கு மேல் சாலையிலேயே நின்று கொண்டு போன் பேசுவது போல் வைஷ்ணவி நடித்து இருக்கிறார். பின் அந்த வாலிபருக்கு தெரியாமலேயே வைஷ்ணவி வீட்டிற்கு சென்று இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் தனக்கு தொந்தரவு தந்த அந்த நபர் மீது புகார் அளிப்பதற்காக செல்போனில் பேசுவது போலவே வைஷ்ணவி படம் எடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

வைஷ்ணவியை பாராட்டிய போலீஸ்:

தற்போது அந்த படத்தை சென்னை காவல்துறை டிவிட்டர் பக்கத்தில் டேக் செய்து புகார் அளித்து இருக்கிறார் வைஷ்ணவி. இதை பார்த்த போலீஸ் சமூக வலைத்தளம் மூலம் வைஷ்ணவிக்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறது. மேலும், இந்த புகார் குறித்து விசாரணை நடத்துவதாகவும் இதுபோன்ற நிலைகளில் 100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு சென்னை காவல்துறை சமூக வலைத்தளம் வைஷ்ணவிக்கு பதில் அளித்து இருக்கிறது.

மர்ம நபர் குறித்து செக்யூரிட்டி சொன்னது:

மேலும், அந்த நபரை குறித்து வீட்டில் செக்யூரிட்டியிடம் காட்டி இவரை இதற்கு முன்னால் பார்த்ததுண்டா? என கேட்டு இருக்கிறார். அதற்கு அவர், இதே தெருவில் ஏற்கனவே ஒரு பெண்ணை தொந்தரவு செய்தபோது நான் பார்த்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். பெண்களின் பாதுகாப்பிற்கு இந்த மாதிரி மர்ம நபரை ஏதாவது செய்ய வேண்டும் எனவும் பதிவிட்டிருக்கிறார். இதனையடுத்து போலீசார் அந்த மர்ம நபர் மீது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news