பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது வைஷ்ணவி எப்போதும் கையில் உறை அணிந்திருந்தார். மாடல் டிரஸ் அணிந்தாலும் சரி, புடவையாக இருந்தாலும் சரி, தனது கையில் அந்த உரையை அணிந்துருப்பதை வழக்கமாக வைத்திருந்தார் வைஷ்னவி. அவரது கையில் அந்த உரையை காணாமல் இருப்பது கொஞ்சம் அபூர்வமாகவே இருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் நேரலையில் வந்த வைஷ்ணவி ரசிகர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் வைஷ்ணவி அணிந்திருக்கும் கை உரையை பற்றி கேட்டிருந்தார். அதற்கு வைஷ்ணவி, இந்த கை உரையை எதிர்ச்சியாக பார்த்தேன், அதனை எனக்கும் மிகவும் பிடித்து போய்விட்டது. அதனை நான் உடலில் அணியும் சில ஆபரணங்களை போன்றே அதனை பயன்படுத்தி வருதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அவரது முகத்தில் உள்ள தழும்பை போன்று கையிலும் தழும்பு இருப்பதால் தான் அவர் எப்போதும் கையில் உரை அணிந்திருக்க சிலர் நினைத்து வந்தனர். ஆனால், அது உண்மை இல்லை என்று கூறியுள்ள வைஷ்ணவி, தனக்கு அந்த உரை மிகவும் பிடித்துப் போனதால் அதனை எப்போதும் அணிந்து வருகிறேன் என்றும், தனுக்கு கையில் எந்த ஒரு தழும்பும் இல்லை என்றும் கூறியுள்ளார். இதனால் இதுநாள் வரை வைஷ்ணவி அணிந்திருந்த கை உரையின் ரகசியம் தற்போது ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.

