தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் வையாபுரி. இவர் தேனி அருகிலுள்ள முத்துதேவன்பட்டி என்னும் ஊரை சேர்ந்தவர். இவருடைய உண்மையான பெயர் ராமகிருஷ்ணன். ஆனால், திரைப்படத்திற்காக வையாபுரி என்று பெயரை மாற்றிக்கொண்டார். இவர் முதன் முதலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னமருது பெரியமருது, மால்குடி டேஸ் என்ற தொடர்களில் நடிக்க தொடங்கினார்.
அதற்கு பிறகு தான் இவர் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இவர் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த செல்லகன்னு என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்குப் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படத்தில் நடித்துள்ளார்.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் 250 படங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் வையாபுரி அவர்கள் பல மாதங்களுக்கு முன்னர், அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அளித்த பேட்டி அளித்து இருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பது, நான் நிறைய பெரிய நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கேன். அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் கூட நான் நடித்து உள்ளேன். ஆனால், தற்போது நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் நான் தேடிக் கொண்டு இருக்கிறேன் என்று கூறி இருந்தார்.நடிகர் வையாபுரி ஆனந்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்.
சமீபத்தில் தனது மகள் குறித்து பேசிய வையாபுரி,என் பொண்ணு ஷிவானிஎல்.கே.ஜி படிக்கும்போதிலிருந்தே டிராயிங்ல அதிக ஆர்வம். டிராயிங் க்ளாஸூக்கு அனுப்பினோம். அவளின் திறமையைப் பார்த்த நடிகரும் ஓவியருமான பாண்டு சார், உத்வேகம் கொடுத்தார். அப்புறம், கே.கே.நகரில் இருக்கும் ‘அன்னை காமாட்சி கலைக்கூடத்தில்’ வெங்கடாசலம் மாஸ்டர்கிட்ட க்ளாஸூக்கு அனுப்பினோம்.
தஞ்சாவூர் பெயின்டிங் சிறப்பாகச் செய்வாள். பொதுவா, பெயின்டிங்ல டிப்ளமோ கோர்ஸ் பண்றதுக்கு 10 மாசம் பயிற்சி எடுக்கணும். என் பொண்ணு, மூணே மாசத்தில் முடித்தால். அவள் இன்ஸ்டிட்யூட்டில் வருடம்தோறும் பெயின்டிங் கண்காட்சி வைப்பாங்க. அதில், பலரும் தங்கள் ஓவியத்தை காட்சிப்படுத்துவாங்க. அதில் என் பொண்ணு ஓர் இயற்கை காட்சி பெயின்டிங்கை வெச்சிருந்தாள்.
அதைப் பலரும் பாராட்டினாங்க என்று கூறியிருந்தார் வையாபுரி. சமீபத்தில் நடிகர் வையாபுரி தனது குடும்பத்தாருடன் பல வருடங்களுக்கு முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தற்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். நடிகர் வையாபுரி இறுதியாக யோகி பாபுவின் பேய் மாமா படத்தில் நடித்திருந்தார். தற்போது பார்த்திபன் நடித்து வரும் யுத்த சத்தம் படத்தில் நடித்து வருகிறார்.