தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் வையாபுரி. இவர் தேனி அருகிலுள்ள முத்துதேவன்பட்டி என்னும் ஊரை சேர்ந்தவர். இவருடைய உண்மையான பெயர் ராமகிருஷ்ணன். ஆனால், திரைப்படத்திற்காக வையாபுரி என்று பெயரை மாற்றிக்கொண்டார். இவர் முதன் முதலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னமருது பெரியமருது, மால்குடி டேஸ் என்ற தொடர்களில் நடிக்க தொடங்கினார். அதற்கு பிறகு தான் இவர் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இவர் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த செல்லகன்னு என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்குப் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படத்தில் நடித்துள்ளார்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் 250 படங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் வையாபுரி அவர்கள் பல மாதங்களுக்கு முன்னர், அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அளித்த பேட்டி அவர் கூறியிருப்பது, நான் நிறைய பெரிய நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கேன். அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் கூட நான் நடித்து உள்ளேன். ஆனால், தற்போது நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் நான் தேடிக் கொண்டு இருக்கிறேன்.
ஒரு கலைஞன் எப்போதுமே பிஸியாக இருக்க வேண்டும். ஃப்ரீயாக இருந்தால் மனதில் சஞ்சலம் ஏற்படும்.சினிமாவில் இவ்வளவு ஹீரோக்கள் இருக்கிறார்கள். ஆனால், எங்களை மாதிரி கலைஞர்களை கண்டு கொள்வது இல்லை. விஜய், அஜித்திடம் வாய்ப்பு கேட்டு நான் சென்ற போது இதோ அடுத்த படத்தில் பண்ணிடலாம் என்று சொல்வார்கள். ஆனால், அதன் பின்னர் நான் கேட்பது அவர்களிடம் போய் சேருகிறதா என்று தெரியவில்லை .
விஜய் சேதுபதி பார்த்தீங்கன்னா சினிமாவுக்குள் நுழைந்த கொஞ்சம் காலத்திலேயே பெரிய இடத்துக்கு வந்தார். அவர் அந்த பெரிய இடத்துக்கு வர காரணம் எண்ணங்கள் அழகாக இருந்தது. நான் அவருடன் ஒரு படம் கூட பண்ணியதில்லை. அவருடன் படம் நடிக்க அவருடைய அலுவலகத்துக்கு சென்றேன். உடனே அவர் இயக்குநர்களுக்கு போன் பண்ணி வையாபுரிக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுங்கள் என்று சொன்னார். இந்த மாதிரி நல்ல உள்ளம் கொண்ட நடிகர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால், நான் 10,15 படம் நடித்த பெரிய நடிகர்கள் எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை.
அது தான் கஷ்டமாக இருக்கு. எங்களுக்கு தெரிந்த தொழில் நடிப்பு மட்டும் தான். எங்களுக்கு வேறு எந்தத் தொழிலும் கிடையாது. மேலும், எங்களைப் போன்ற கலைஞர்களை வேணாம் என்று சொல்வது தான் ஏன் என்று தெரியவில்லை. நான் இப்ப சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து இருக்கிறேன். அவர்களே எங்களை மாதிரி கலைஞர்களை நடிக்க வைக்க யோசிக்கிறார்கள். தயவுசெய்து இருக்கும் போது தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுங்கள். இறந்த பிறகு இரங்கல் தெரிவிக்காதீர்கள். பணம், பொருள் கேட்டு வரவில்லை. நடிக்க வாய்ப்பு கேட்டு தான் வருகிறேன். அதை மனதில் கொண்டு இருங்கள் என்று உணர்ச்சி வசமாக பேட்டியளித்திருந்தார்.