ஜமீன்தார் குடும்பம், சொத்துக்காக வழக்கு போட்ட சொந்த மகள் – நேற்று காலமான நடிகரின் அறிந்திராத பக்கங்கள்.

0
1168
siva
- Advertisement -

விரிந்த கண்கள், முறுக்கு மீசை, அடித்தால் இடி என்ற தோற்றத்துடன் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்துள்ள பொன்னவராயன் கோட்டையை சேர்ந்தவர் நடிகர் டி.சிவநாராயண மூர்த்தி. இவர் மிராசுதார் குடும்பத்தை சேர்ந்தவர். மேலும்,இவர் அதீத கடவுள் பக்தி கொண்டவர் தன்னுடைய சிறு வயதிலேயே ஆன்மிகம், பொதுத்தொண்டு என நற்பணிகளை செய்து வந்துள்ளார். லயன்ஸ் கிளப் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் இவர் சென்று இருக்கிறார். அப்போது அதே நிகழ்ச்சிக்கு வந்த பிரபல தமிழ் சினிமா இயக்குனரான விசு இவருடைய வித்தியாசமான தோற்றத்தை கண்டு அவரை “வீடுதோறும் வசந்தம்” என்ற சீரியலில் நடிக்க வைத்தார். பின்னர் மு.களஞ்சியம் இயக்கிய “பூந்தோட்டம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

அப்படத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லனான ரகுவரனுடன் இணைத்து நடித்திருந்தார். பின்னர் தமிழ், தெலுங்கு , மலையாளம் என கிட்டத்தட்ட 259 திரைப்படங்களில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியுடைய அப்பா, போலீஸ், சாமானியன், அரசியல்வாதி, ரவ்டி, அதிகாரி ஏன பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். மேலும் தமிழ் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சந்திரமுகி, படையப்பா என பல வெற்றி படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.

- Advertisement -

இவர் தொடக்கத்தில் வில்லனாக அறிமுகமாக்கினாலும் பின்னர் காமெடி நடிகராக சிறந்து விளங்கினார். உதாரணமாக வைகை புயல் வடிவேலுவுடன் 20 படங்கள், விவேக்குடன் 20 படங்கள் என பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மற்ற காமெடி நடிகர்களை போல இவரும் சில இடங்களில் அவமானங்களை சந்தித்த்திருப்பதாக ஒரு பேட்டியின் போது கூறி இருந்த அவர் கவுண்டாமணி செந்தில் வாங்காத அடியயா நாம் வாங்கி விட போகிறோம் என்று சகஜமாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

நடிகர் சிவநாராயண மூர்த்தி அவர்கள் புஷ்பவல்லி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவருடைய மகன்கள் பில்டிங் தொழில் செய்து வருகின்றனர். இவரது மகளை பி.இ வரையில் படிக்க வைத்து 20 லட்சம் கடன் வாங்கி தான் திருமணம் செய்ததாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஒரு கட்டத்தில் கடன் கழுத்தை நெறிக்கவே தன் சொந்தசொத்தை விற்க முயன்றார்.

-விளம்பரம்-

ஆனால்,அவரது மகள், சொத்தில் தனக்கும் பங்கு இருக்கிறது என்று வழக்கு போட்டு இருக்கிறார். இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசிய அவர் ”கல்யாணம் பண்ணிக் கொடுத்த காசெல்லாம் கணக்குல வரலை. இதையெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, காமெடி பண்றவன் வாழ்க்கையும் காமெடியாதான் இருக்கும்னு நெனச்சிடக் கூடாது பாருங்க. காமெடி நடிகர்கள் செய்யும் காமெடியை போலவே எல்லா நடிகர்களுடைய வாழ்க்கையும் காமெடியாக இருக்காது என்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

இந்நிலையில் சினிமாவின் வந்தது முதல் ரஜினி, சிவாஜி, விஜய், அஜித், விவேக், வடிவேலு என பல ஜாம்பவான்களுடன் நடித்த இவர் 218 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கடைசியாக 2015ஆம் ஆண்டு விந்தை என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் சிறிய கதாபாத்திரங்களிலும் சீரியல்களிலும் நடித்து வந்தார். இப்படியுருக்கும் போதுதான் நேற்று 7ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் உடல்நலக்குறைவின் காரணமாக காலமானார்.

அவருக்கு வயது 67. சிவ நாராயணமூர்த்தியின் இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் இன்று மதியம் 02.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.இவரது இறப்பை தொடர்ந்து அவரது சொன்ன வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் அவரது உடலுக்கு, ஊர் மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், தமிழ் திரையுலக வட்டாரங்களில் அவரின் இறப்பு செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement