அப்பாவா, மகனா? இருவரில் யார் வந்தா ஏத்துப்பீங்க?ரசிகர் கேள்விக்கு வனிதா அளித்த பதில்.

0
801
- Advertisement -

சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் தான் நடித்தார். பின் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் வேற லெவல் பிரபலமானார் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-
Vanitha

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் படங்கள், சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார்.வனிதா சினிமா உலகிலும், சோசியல் மீடியாவிலும் பிசியாக இருந்தாலும் இவருடைய குடும்ப வாழ்க்கையில் தோல்வியைத்தான் சந்தித்து இருக்கிறார். வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

- Advertisement -

மூன்று திருமணம் :

அதன் பின்னர் இவர் இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் காதலில் இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் பிரிந்து விட்டார்கள். அதன் பின்னர் தனது இரண்டு மகள்களுடன் வனிதா தனியாக வசித்து வந்தார். பின் வனிதா கடந்த ஆண்டு பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரையும் விட்டு பிரிந்து வந்தார். இப்படி வனிதா மூன்று முறை திருமணம் செய்தும் தோல்வியில் தான் முடிந்து உள்ளது.

வனிதா மகன் ஸ்ரீஹரி :

வனிதா கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும், வனிதா மற்றும் ஆகாஷ் தம்பதியருக்கு திருமணம் முடிந்த ஓர் ஆண்டிலேயே ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள். நன்றாக சென்ற இவர்களது திருமண மகளும் கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னர் தனது மகனை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆகாஷ்.

-விளம்பரம்-

தற்போது ஸ்ரீஹரி ஆகாஷூடன் தான் வளர்ந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வனிதா இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், உங்களுக்கு யாராவது ஒருத்தரைத் தான் தேர்ந்தெடுக்கணும் அப்படின்னு வாய்ப்பு இருந்தா உங்களோட அப்பாவை தேர்ந்தெடுப்பீங்களா? அல்லது உங்களோட மகனை தேர்ந்தெடுப்பீங்களா? என்று கேள்வி எழுப்பினார்.

வனிதா சொன்ன பதில் :

இதற்கு பதில் அளித்த வனிதா, ”யார் என்னை தேர்ந்தெடுக்குறாங்களோ, அவங்கள தான் நான் தேர்ந்தெடுப்பேன். ஆண்களின் பின்னாடி ஓடி ஓடி ரொம்ப சோர்ந்து போயிட்டேன். இனி ஒருபோதும் அந்த தப்பை செய்யவே மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.ரீஹரி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் ஸ்ரீஹரியிடம் ‘ வனிதாவோட பையனா நீங்க’ என்று கேட்டிருந்தார். அதற்கு ஸ்ரீஹரி ‘நான் ஆகாஷோட பையன் ப்ரோ’ என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement