43 வயதில் விண்வெளி வீரரை இரண்டாம் திருமணம் செய்த தனுஷ் பட நடிகை

0
162
- Advertisement -

தனுஷ் பட நடிகை லீனா இரண்டாம் திருமணம் செய்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாள மொழியில் மிக பிரபலமான நடிகையாக இருப்பவர் லீனா மோகன் குமார். இவர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர். இவர் 1998 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியாகியிருந்த சினேகம் என்ற படத்தின் மூலம் தான் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் மலையாளத்தில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். பின் தமிழில் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அனேகன் படத்தில் லீனா அவர்கள் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது தான் தமிழில் இவருடைய முதல் படம். அதனை அடுத்து இவர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஓ2 போன்ற படங்களில் நடித்திருந்தார்.

- Advertisement -

லீனா குறித்த தகவல்:

இப்படி கிட்டத்தட்ட இவர் 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போதும் இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும், இவர் சினிமா நடிகை மட்டும் இல்லாமல் சின்னத்திரை சீரியலிலும் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இவர் மலையாள மொழி சீரியலில் தான் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் நிறைய விளம்பர படங்களில் நடித்தும், பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

லீனா முதல் திருமணம்:

இந்நிலையில் நடிகை லீனா மோகன் அவர்கள் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அதாவது, இவர் ஏற்கனவே அபிலாஷ் குமார் என்பவரை 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2013 ஆம் ஆண்டு பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். பிரிவிற்குப் பிறகு நடிகை லீனா அவர்கள் தன்னுடைய பெற்றோர்களுடன் தனியாக வசித்து வந்தார்.

-விளம்பரம்-

லீனா இரண்டாம் திருமணம்:

இப்படி இருக்கும் நிலையில் இவர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கிறார். இவர் பாலக்காட்டை சேர்ந்தவர். அதோடு பிரசாந்த் பாலகிருஷ்ணன் அவர்கள் ககன்யான் விண்வெளி வீரரும் ஆவார். தற்போது இவர்களுடைய திருமண புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலருமே இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement