பெண் கொடுமை, குழந்தை திருமணம், சமூகத்திற்கு தவறான எடுத்துக்காட்டு – எதிர் நீச்சல் சீரியலுக்கு குவியும் எதிர்ப்புகள்.

0
348
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலை நிறுத்த சொல்லி நெட்டிஷன்கள் போடும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் ஒன்று. இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியலில் மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள்.

-விளம்பரம்-

அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். கடந்த சில வாரங்களாகவே சீரியலில் தர்ஷினி கடத்தல் டிராக் தான் சென்று கொண்டிருக்கின்றது. தர்ஷினி பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த போது மர்ம நபர்கள் கடத்தி விடுகிறார்கள். தர்ஷினி காணவில்லை என்று அவருடைய அம்மா, சித்திமார்கள் எல்லாம் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இன்னொரு பக்கம் குணசேகரன், விசாலாட்சி இருவரும் தர்ஷினியை மறைத்து வைத்திருப்பதே ஈஸ்வரி தான். அவர்கள் நாடகம் ஆடுகிறார்கள் என்று வழக்கம்போல் பெண்களை தான் குறை சொல்லி கொண்டிருக்கிறார்கள். யாரும் எதிர்பாராத வகையில் கதிர், ஞானம் இருவரும் அவர் அண்ணனுக்கு எதிராகவே பேசுகிறார்கள். இதனால் ஆத்திரம் தாங்காத குணசேகரன், கதிர்- ஞானம் இருவரையும் திட்டுகிறார். பின் போலீஸ் ஜீவானந்தம், நான்கு பெண்களையும் கைது செய்கிறது. அதற்கு பின் பெண்கள் நான்கு பேரையும் போலீஸ் கைது செய்து அடித்து கொடுமைப்படுத்திகிறார்கள்.

சீரியல் கதை:

இதை எல்லாம் பார்த்து கதிர், ஞானம், சக்தி மனம் உடைந்து குணசேகரனிடம் முறையிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் தர்ஷினியை கடத்தியதை குணசேகரன் தான் என்று காண்பிக்கிறார்கள். பின் எப்படியே தர்ஷினியை ஜீவானந்தம் கண்டு பிடிக்கிறார். பின் ரவுடி கும்பல் இடம் மீண்டும் தர்ஷினி மாட்டி போலீஸ் அவர்களை பிடித்து தர்ஷினியை காப்பாற்றுகிறார்கள். ஆனால், ஜீவானந்தம் நிலைமை என்னவென்று தெரியவில்லை. கடைசியில் குணசேகரன் நல்லவர் போல் வேஷம் போட்டு கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

நேற்றைய எபிசோட்:

வழக்கப்பல் குணசேகரன் அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரிக்கு ஜாமீன் கிடைத்து விடுகிறது. ஆனால், தர்ஷினியை ஈஸ்வரி பார்க்க கூடாது என்று கோர்ட்டில் ஆர்டர் வாங்கி விடுகிறார் குணசேகரன். பின் தரிஷினையை வீட்டுக்கு அழைத்து வந்தவுடன் யாரும் என் மகளிடம் நெருங்க கூடாது என்று குணசேகரன் பேசுகிறார். இதனால் அனைவருமே அமைதியாக நிற்கிறார்கள். தர்ஷினி இன்னும் அந்த மனநிலையில் இருந்து மீண்டு வராததால் அவர் எதற்கெடுத்தாலும் பயந்து கொண்டும் கை கால்களை ஆட்டிக் கொண்டுமே இருக்கிறார்.

இன்றைய எபிசோட் ப்ரோமோ:

இந்த நிலையில் இன்றைய எபிசோடு காண ப்ரோமோவில் தர்ஷினியை கல்யாணம் செய்து கொள்வேன் என்று கரிகாலன் சொல்கிறார். இதனால் வீட்டில் கலவரம் வெடிக்கிறது. கடைசியில் குணசேகரன், கண்டிப்பாக என் மகளுக்கு கல்யாணம் செய்து கொடுப்பேன். கரிகாலன் தான் என் மருமகன் என்று பேசுகிறார். இதனால் அனைவருமே அதிர்ச்சி அடைகிறார்கள். தற்போது இந்த ப்ரோமோ தான் ரசிகர்கள் மத்தியில் பயங்கர கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பலருமே சீரியலை திட்டியும் நிறுத்த சொல்லியும் வருகிறார்கள். காரணம், சீரியலில் நிறைய எதிர்மறையான கருத்துக்கள் காட்டப்படுகிறது. சில பேர் தயவு செய்து இந்த சீரியலை நிறுத்தவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றெல்லாம் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள். இதன் மூலம் ஆவது சீரியல் ட்ராக் மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement